1996ஆம் ஆண்டு வெளியாகி பட்டித்தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பிய படம், இந்தியன். உலக நாயகன் கமல் ஹாசன் தந்தையாகவும் மகனாகவும் இரண்டு வேடங்களில் இப்படத்தில் நடித்திருந்தார். கவுண்டமனி, செந்தில், கஸ்தூரி, மனிஷா கொய்ராலா, சுகன்யா ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகமான இந்தியான்-2 இப்போது படப்பிடிப்பு மற்றும் பட வேலைகளின் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த படத்திலும் கமலே ஹீரோவாக நடிக்கிறார். மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோரும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இளசுகளுக்கு பிடித்த ‘ராக்ஸ்டார்’ அனிருத் இப்படத்திற்கு இசையமைகக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதன்முறையாக இணையும் கூட்டணி!


சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஆரம்பமான நிலையில் பல்வேறு காரணங்களால் அதற்கு தடை ஏற்பட்டது. இதையடுத்து, ஒருவழியாக இதன் இறுதிக்கட்ட பணிகள் நடைப்பெற்று வருகின்றன. ஷங்கர்-அனிருத் காம்போவை முதன் முறையாக ரசிகர்கள் திரையில் காண உள்ளனர். ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைகோர்த்து பணியாற்றிய இயக்குநர் ஷங்கர், இந்த படத்தில் புது சாய்ஸாக அனிருத்தை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து, இவர்கள் இருவரும் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு ஆல்பம் பாடலுக்கு இசையமைக்கும் போது ‘வைப்பிங்’ செய்த வீடியோ வைரலாகி வருகிறது.


வைப் செய்யும் ஷங்கர்-அனிருத்


இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் போலவே அதன் இசையமைப்பு பணிகளும் விரைவில் நிறைவு பெற உள்ளன. இதையடுத்து, இயக்குநர் ஷங்கர் இசையமைப்பாளர் அனிருத்துடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு வைப் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.



இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “ஷங்கரே வைப் பண்றாரே..அப்போ கண்டிப்பா பாட்டி சூப்பர் ஹிட்தான்..!” என கமெண்ட் செய்து வருகின்றனர். 


மேலும் படிக்க | பக் பக் காட்சிகளுடன் திகில் நிறம்பிய போர் தொழில் டீஸர் வெளியீடு


பிசி வாழ்க்கையில் அனிருத்:


தனது இசைக்கு அறிமுகமாக அமைந்த 3 படத்தின் மூலமே அனிருத் ரசிகர்கள் மட்டுமன்றி பல முன்னணி இயக்குநர்கள் மற்றும் பிரபல நடிகர்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டார். கமலின் இந்தியன் 2 படம் மட்டுமன்றி, இதற்கு முன்னாள் வெளியான விக்ரம் படத்திற்கும் அவரே இசையமைத்திருந்தார். விஜய்யின் சமீப கால படங்களுக்கும் சரி, இனி வர இருக்கும் லியோ போன்ற படங்களுக்கும் சரி அனிருத்தே அதற்கு மெட்டு கட்ட இருக்கிறார். ரஜினியின் ஜெயிலர் படத்திற்கும், டி.ஜே ஞானவேல் ராஜா ரஜினியை வைத்து இயக்க இருக்கும் தலைவர் 170 படத்திற்கும் அனிருத்தே இசைமைக்க இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. அது மட்டுமன்றி, அஜித்தின் விடா முயற்சி, விஜய் தேவரகொண்டாவின் புதிய படம், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் தேவரா போன்ற படங்களுக்கும் அனிருத்தான் இசையமைக்கிறார். இதில் பாதி படங்கள் இந்த வருடமே வெளியாக இருக்கின்றன. இதற்கிடையில் அவர், அவ்வப்போது வெளிநாடுகளிலும் உள்ளூரிலும் அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொண்டு இருக்கிறார். இதனால் அனிருத்தின் திரை வாழ்க்கை மிகவும் பிசியாக உள்ளது. 


இந்தியன் 2 படப்பிடிப்பு தலங்கள்:


பலரது எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகிவரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு உலகின் பல்வேறு மூலைகளில் நடைப்பெற்றது.  பீகார், தென் ஆப்ரிக்கா, தைவான் உள்ளிட்ட இடங்களில் நடைப்பெற்ற படப்பிடிப்பானது தற்போது சென்னையில் நடைப்பெற்று வருகிறது. இயக்குநர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இதுவும் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. ஆகையால், இந்த வருடமே ஷங்கர் இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | பல கோடிகளுக்கு அதிபதி... ஆனாலும் சரத்பாபுவின் கடைசி ஆசை நிறைவேறவில்லையா? - முழு விவரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ