Anirudh - Shah Rukh Khan Reunites For King Movie: கடந்த 2023 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக் கான் நடிப்பில் அனிருத் இசையில் வெளியான திரைப்படம் ஜவான். தற்போது இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் ஷாருக் கான் - அனிருத் இணையயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை இங்கே காணபோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இசையமைப்பாளர் அனிருத்:
2012ஆம் ஆண்டு வெளியாகி 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய அளவில் ஹிட் பாடல்களை கொடுதிருந்தார். குறிப்பாக இப்படத்தின் இடம் பெற்றிருந்த ‘Why This Kolaveri Di’ பாடல் உலகளவில் பெரிய ஹிட் அடித்தது. இணையதளம் பெரிதாக வெளியில் தெரியாத அந்த காலத்திலேயே இணையத்தில் வைரலான பாடல் இது. இதைத் தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுக்கு இசையமைக்கத் தொடர்ந்தார். அதனுடன் இவர் இசையமைத்த அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹாட்டானது என்றே தான் கூற வேண்டும். சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு இசையமைத்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் மெகா ஹிட்டானது.


மேலும் படிக்க | Aishwarya Rai : கையில் மாவுக்கட்டுடன் ஐஸ்வர்யா ராய்! கேன்ஸ் பட விழா புகைப்படங்கள்..


பாலிவுட்டில் அனிருத்:
தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்து வரும் அனிருத் கடந்த 2023 ஆம் ஆண்டில் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் உலகின் முன்னணி நடிகரான ஷாருக் கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்திற்கு இசையமைத்தார். ஜவான் திரைப்படத்திற்கு அவர் இசையமைத்தது மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மேலும் "ஜவான்" திரைப்படம் உலக அளவில் சுமார் 1500 கோடியை தாண்டி வசூல் செய்து மெகா ஹிட் திரைப்படமாக மாறிய நிலையில், பாலிவுட் உலகில் அனிருத்திற்கு இருந்த வரவேற்பு இரட்டிப்பானது. அதனுடன் இந்த படத்தின் பாடல்களுக்கு பல விருதுகளும் தொடர்ந்து வழங்கப்பட்டது. குறிப்பாக வட இந்திய ரசிகர்கள் இந்த படத்தின் இசை மற்றும் பிஜிஎம்ஐ சிறப்பாக கொண்டாடினர்.


மீண்டும் இணையும் ஷாருக்கான் -அனிருத் கூட்டணி:
இந்த நிலையில் தற்போது ஜவான் படத்தில் ஷாருக்கான் -அனிருத் கூட்டணி மாஸ் காட்டிய சூழலில் இரண்டாவது முறையாக ஷாருக்கானுடன் அனிருத் இணையவுள்ளார். ஜவான் படத்தில் ஷாருக்கான் -அனிருத் கூட்டணி மாஸ் காட்டிய சூழலில் இரண்டாவது முறையாக ஷாருக்கானுடன் அனிருத் இணையவுள்ளார். மேலும் இயக்குனர் சுஜாய் கோஷ் கைவண்ணத்தில் இந்த படம் உருவாகவுள்ள சூழல் படத்தில் அவரது மகள் சுஹான் கான் இணைந்துள்ளார். ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் கிங் என படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மீண்டும் ஷாருக்கான் -அனிருத் கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



 மேலும் படிக்க | நடிகர் கார்த்திக் குமார் காவல் நிலையத்தில் புகார்! விஸ்வரூபம் எடுத்த ஆடியோ விவகாரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ