நடிகர் கார்த்திக் குமார் காவல் நிலையத்தில் புகார்! விஸ்வரூபம் எடுத்த ஆடியோ விவகாரம்

Latest News Karthik Kumar Files Police Complaint : நடிகரும் காமெடியனுமான கார்த்திக் குமார், பட்டியலின பெண்களை தரக்குறைவாக பேசியதாக ஆடியோ லீக் ஆன விவகாரத்தில் அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.   

Written by - Yuvashree | Last Updated : May 17, 2024, 10:06 AM IST
  • பட்டியலின பெண்கள் குறித்த ஆடியோ
  • நான் அவன் இல்லை என கூறும் கார்த்திக்
  • காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக வீடியோ
நடிகர் கார்த்திக் குமார் காவல் நிலையத்தில் புகார்! விஸ்வரூபம் எடுத்த ஆடியோ விவகாரம் title=

Latest News Karthik Kumar Files Police Complaint : நடிகரும் காமெடி நடிகருமான கார்த்திக் குமார், பட்டியலின பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசிய ஆடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், அவர் அது தனது ஆடியோவே இல்லை என்று கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். 

ஆடியோ லீக்!

திரைப்பட நடிகரும் மேடை நகைச்சுவை கலைஞருமான கார்த்திக் குமார் பற்றிய செய்திகள்தான் கடந்த 2 நாட்களாக இணையதளம் முழுவதும் பேச்சாக இருக்கிறது. நடிகர் கார்த்திக் குமார், பட்டியலின பெண்களை யாருடனோ ஒப்பிட்டு பேசியிருக்கும் ஆடியோ இணையத்தில் சில நாட்களுக்கு முன்பு வைரலானது. இது கேட்பதற்கு அவரது குரலுடன் மிகவும் பொருந்தி போனதால் பலர் இது இவர்தான் என நம்ப ஆரம்பித்து விட்டனர். ஆனால், இதற்கடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்ட கார்த்திக், அது தனது குரல் இல்லை என்றும், அந்த ஆடியோவில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகள் தனது அகராதியிலேயே இல்லை என்றும் கூறியிருந்தார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karthik Kumar (@evamkarthik)

இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க தொடங்கியதை தொடர்ந்து, அவர் தற்போது புதிதாக இன்னொரு வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார். அதில், அந்த ஆடியோவிற்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும், தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி எனக்கூறிய அவர், தன் மீது வன்மத்தை கக்கியவர்களின் மனம் அன்பால் பெருகட்டும் என்றும் கூறியிருக்கிறார். கார்த்திக் குமார் பேசியதாக வெளியிடப்பட்ட ஆடியோவில் யாரோ ஒருவர் குழந்தைகள் குறித்தும் பேசியிருந்தார். ஆனால், கார்த்திக்கிற்கு குழந்தைகளே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கார்த்திக் மீது பாலின குற்றச்சாட்டுகளை வைத்த சுசித்ரா!

கார்த்திக் குமாரும், தமிழ் திரையுலகின் பின்னணி பாடகி சுசித்ராவும் 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2017ஆம் ஆண்டு சுசி லீக்ஸ் பிரச்சனைக்கு பிறகு, இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆனது. இந்த நிலையில், சமீபத்தில் பாடகி சுசித்ரா ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அதில், கார்த்திக் குமாரை தன் பாலின ஈர்ப்பாளர் என்று கூறிய அவர், அவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதியும் இல்லை என்று மருத்துவர்கள் சந்தேகித்ததாக தெரிவித்திருக்கிறார். கார்த்திக் குமாருடன் சேர்த்து, நடிகர் தனுஷையும் தன் பாலின ஈர்ப்பாளர் என்று கூறியிருக்கிறார் சுசித்ரா. 

மேலும் படிக்க | “நான் Gay-வா?” சுசித்ராவிற்கு பதிலடி கொடுத்த கார்த்திக் குமார்! வைரல் வீடியோ..

2017ஆம் ஆண்டு Suchi Leaks சர்ச்சையில் த்ரிஷா, தனுஷ், அனிருத், ஆண்ட்ரியா, அனுயா, டிடி, ராணா டகுபதி உள்ளிட்ட பல்வேறு திரையுலகினரின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இவையணைத்தும் சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் இருந்து பகிரப்பட்டன. இந்த புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து, சுசித்ரா தமிழ் திரையுலகினரிடம் இருந்தே மொத்தமாக ஒதுக்கி வைக்கப்பட்டார். இவருக்கு வாய்ப்புகள் எதுவும் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில்தான் அவர் இது குறித்து தனது சமீபத்திய நேர்காணலில் பேசியிருக்கிறார்.

“அது ஒரு Prank" 

சுசி லீக்ஸ் குறித்து பேசியிருக்கும் சுசித்ரா, அது ஒரு பிராங்க் என்றும் சில நடிகர்கள் போனை மாற்றிக்கொண்டு விளையாடும் போது இந்த புகைப்படங்கள் லீக் ஆனதாகவும் கூறியிருக்கிறார். தற்போது, இணையதளம் முழுவடும் இவர் குறித்த பேச்சாகத்தான் இருக்கிறது. கூடவே நடிகர் கமல் ஹாசனின் பார்டியில் போதை பொருட்கள் வெத்தலை பாக்கு போல வினியோகிக்கப்படும் என கூறியிருக்கும் அவர், அதை தான் உபயோகிக்காததால் தனக்கு இந்த நிலையா என கேள்வி எழுப்பியிருக்கிறார். இவர் சொல்வது பொய்யா உண்மையா என தெரியாத பலர், குழம்பி வருகின்றனர். 

மேலும் படிக்க | பட்டியலின பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசிய கார்த்திக் குமார்?! லீக் ஆன ஆடியோ…

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News