அனிருத்தை அழ வைத்த நடிகர் கமல்ஹாசன்...காரணம் என்ன?
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன்-2 படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். கமல்ஹாசன் அடுத்ததாக ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
ஜூன்-3ம் தேதியான நாளைய தினம் கமலின் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு பெருகியுள்ளது. படத்திற்கான முன்பதிவை வைத்து பார்க்கையில் இதுவரை இந்திய படங்களுக்கு இல்லாத வகையில் பெரிய ஓப்பனிங் இந்த படத்திற்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சிறந்த ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் கமலுக்கு இணையாக விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜ் கதையை நிராகரித்த பாகுபலி நாயகன்?
இப்படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கான புரொமோஷன் பணிகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. இதில் கலந்துகொண்ட படத்தின் இசையமைப்பாளர் அனிரூத் விக்ரம் படத்தையும், கமல்ஹாசனையும் பாராட்டி பேசி இருக்கிறார். தற்போது பலராலும் விரும்பப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவரும், பல ஹிட் பாடல்களையும் கொடுத்த இசையமைப்பாளர் அனிரூத் கூறுகையில், நான் எப்போதும் எதற்கும் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டது இல்லை, ஆனால் விக்ரம் படத்தில் கமல்ஹாசனின் திறமையான நடிப்பை பார்த்து கண்கள் கலங்கிவிட்டேன் என்று கூறினார்.
மேலும் பேசியவர் தான் கமல்ஹாசன் மீது எவ்வளவு அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன், இந்த படத்தில் அவர் பெரிய சாதனை படைத்திருக்கிறார் என்று கூறினார். ஷங்கர் இயக்கத்தில் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள இந்தியன்-2 படத்திற்கு அனிரூத் தான் இசையமைக்கிறார், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் அடுத்ததாக ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
மேலும் படிக்க | விக்ரம் படத்தை தொடர்ந்து மீண்டும் வில்லனாகும் விஜய் சேதுபதி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR