ரஜினிகாந்தின் அண்ணாத்த (Annaatthe) ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். 'அண்ணாத்த' படப்பிடிப்பு விரைவில் சென்னையில் மீண்டும் தொடங்கும் என்றும், படப்பிடிப்புக்கான செட் பணிகள் ECR இல் நடைபெற்று வருவதாகவும், அங்கு ரஜினிகாந்த் (Rajinikanth) சம்பந்தப்படாத காட்சிகள் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் முன்னதாக செய்திகள் வெளியானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, ரஜினிகாந்த் (Rajinikanth) தனது 50 சதவீத பகுதிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாகவும், மீதமுள்ள காட்சிகள் ஜனவரியில் படமாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால் தற்போது, அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து, நடிகர் ரஜினியும் இப்படப்பிடிப்பில் கலந்து கொள்வார். மேலும் ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. 


 


ALSO READ | ரஜினி நடிக்கும் அண்ணாத்த.. அடுத்த அட்டகாசமான Update என்ன தெரியுமா..?


இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர் டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருந்த அண்ணாத்த ஷூட்டிங் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது 'அண்ணாத்த' படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் தனக்கு தானே பஞ்ச் டயலாக் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, தனக்காக எழுதிய பஞ்ச் டயலாக்குகளை நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் இயக்குநர் சிறுத்தை சிவாவிடம் தெரிவித்ததாகவும் அதனை கேட்ட சிறுத்தை சிவா அட்டகாசமாய் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் எழுதியுள்ள பஞ்ச் டயலாக்குகள் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


 

Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR 


 


ALSO READ | பரட்டையின் பாச்சா பலிக்குமா அல்லது சப்பாணியின் சாணக்கியத்தனம் ஜெயிக்குமா!!