‘ரஜினியா? கமலா?’ என்று இப்போது கேட்டால்….
‘அட யாரு வேணா ஜெயிப்பாங்க.. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!’ என்று தான் கூறுவார்கள். ஆனால் நாம் இப்போது பேசுவது அரசியலுமல்ல, அரசியலைப் பற்றியதுமல்ல.
இருவரும் பல ஆண்டுகளுக்கு முன்னர் கால் பதித்து ஆல மரங்களாய், எட்டா கனிகளாய் உயர்ந்து நிற்கும் சினிமாவைப் பற்றி. ஆம்! கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றி நாயகர்களாக மின்னிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் இவர்கள் இருவரும். பலமுறை தங்கள் படங்கள் மூலம் இருவரும் மோதிக்கொண்டுள்ளார்கள்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், மனிதன்-நாயகன், பாண்டியன்-தேவர் மகன், தளபதி-குணா, புன்னகை மன்னன்-மாவீரன் என பல தருணங்களில் இருவரது படங்களும் ஒரே நேரத்தில் வெளி வந்து கடும் போட்டியை எதிர்கொண்டுள்ளன.
சில சமயம் ரஜினி (Rajinikanth) படங்களும் சில சமயம் கமல் (Kamalahasan) படங்களும் வெற்றியடைந்து ஒருவருடைய ரசிகர் கூட்டத்திற்கு மகிழ்ச்சியையும் ஒருவரது ரசிகர் கூட்டத்திற்கு வருத்தத்தையும் அளித்துள்ளன.
ALSO READ: ரஜினி நடிக்கும் அண்ணாத்த.. அடுத்த அட்டகாசமான Update என்ன தெரியுமா..?
எனினும் சமீபத்திய ஆண்டுகளில், இருவருமே தங்கள் படங்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டதால், இருவரது படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகும் சந்தர்பங்கள் குறைந்தன.
இவர்களின் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மோதிக்கொண்ட படங்கள் என்றால் சந்திரமுகி - மும்பை எக்ஸ்பிரஸ் தான். இதில் கமல் ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. ஆனால் ரஜினியின் சந்திரமுகி ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது.
இந்த நிலையில், சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ரஜினி, கமல் இருவரது படங்களும் ஒன்றாக மோதிக்கொள்ளப் போவதாகத் தெரிகிறது. கொரோனா காரணமாக ஸ்தம்பித்திருந்த சிறுத்தை சிவா (Siruthai Siva) இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த (Annaatthe) படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கி, வரும் 2021ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளிவரும் என கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanakaraj) இயக்கத்தில் கமல் நடிக்கும் படமும் 2021 கோடை விடுமுறைக்கு தான் வெளியாகவுள்ளது என அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வந்துவிட்டன.
ஆகவே ரஜினி மற்றும் கமல் படங்கள் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு 2021 கோடை விடுமுறையில் ஒன்றோடொன்று மோதப்போகின்றன.
சரி, கொஞ்சம் அரசியலும் பேசலாம். சினிமா மட்டுமல்லாமல், 2021-ல் அதே வேளையில், அரசியல் களத்திலும் இருவரும் மோதிக்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் வலுத்து வருகிறது. எனினும், இந்த களத்தில் இவர்களுடன் மோத இன்னும் பல ஜாம்பவான்கள் காத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில், 2020-ஐ கொரோனா (Corona) ஆக்கிரமித்தது என்றால், 2021-ஐ ஆக்கிரமிக்க பல விஷயங்கள் இப்போதே வரிசையில் காத்துக்கொண்டு இருக்கின்றன.
2021 கோடையில் அரசியல், சினிமா என இரண்டிலும்…….
‘பரட்டையின் பாச்சா பலிக்குமா அல்லது சப்பாணியின் சாணக்கியத்தனம் ஜெயிக்குமா’ என்று பொறுத்திருந்து பார்க்கலாம்!!
ALSO READ: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்..."எவனென்று நினைத்தாய்"....
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR