உலகநாயகன் - ஹெச்.வினோத் காம்போ... இன்று வெளியாகிறது அறிவிப்பு?
கமலும், ஹெச்.வினோத்தும் இணையும் படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகுமென்று தகவல் கசிந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் மாபெரும் வெற்றிபெற்றது. தொடர்ந்து வேற்று மொழி படங்கள் ஹிட்டடித்துக்கொண்டிருந்த சமயத்தில் விக்ரம் படத்தின் வெற்றி கோலிவுட்டுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. அந்த வெற்றியும், உத்வேகமும் கொடுத்த உற்சாசகத்தில் கமல் ஹாசன் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகினார். அந்தவகையில் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தியன் 2 மீண்டும் ஷூட்டிங் ஆரம்பித்தது.
தற்போது இந்தியன் 2விலும், பிக்பாஸிலும் கமல் ஹாசன் பிஸியாக இருக்கிறார். இதனையடுத்து விக்ரம் 2 படம் ஆரம்பிக்கப்படுமா என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்தது. அதேசமயம் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் படத்தை இயக்கும் பணிகளில் இறங்கினார். அதனைத் தொடர்ந்து கைதி 2 பட வேலை இறங்கப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனால் விக்ரம் 2 தாமதமாகிறது.
இப்படிப்பட்ட சூழலில் கமல் ஹாசன் மலையாள இயக்குநரான மகேஷ் நாராயணன் படத்தில் நடிப்பார் என தகவல் வெளியானது. இருப்பினும் லோகேஷ் கனகராஜ் கைவசம் இரண்டு படங்கள் இருப்பதால், மகேஷ் நாராயணனுடனான படத்தை முடித்து கமல் யார் இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்தது.
இதனையடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கவிருப்பதாகவும், அந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் கமலுடன் இணையும் படத்திற்கான கதையை வினோத் கமலிடம் கூறிவிட்டார். அந்தக் கதை கமல் ஹாசனுக்கு மிகவும் பிடித்துவிட்டது என கோலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது.
மேலும் படிக்க | இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் நபர் யார் தெரியுமா?
இந்நிலையில் ஹெச்.வினோத்தும், கமலும் இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகுமென்று தகவல் கசிந்துள்ளது. இந்தத் தகவல் கமல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், வினோத்தின் திரைமொழி எப்போதும் பேசப்படும் என்பதால் வினோத் கமலுடன் சேர்ந்து என்ன மேஜிக் செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் பலரிடம் எழுந்திருக்கிறது. ஹெச்.வினோத் இப்போது அஜித்தை வைத்து துணிவு படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படமானது பொங்கலுக்கு வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ