கழட்டிவிட்ட விஜய்! இரண்டு சூப்பர் ஸ்டார்களை இயக்கப்போகும் ஏஆர் முருகதாஸ்!
ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் ஆகிய இருவரையும் வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு புதிய படமொன்றை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழில் விஜய், அஜித், சூர்யா என சில முன்னணி நடிகர்களை வைத்து மாபெரும் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். தென்னிந்திய திரையுலகின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் விறுவிறுப்பானதாக இருக்கும். பீஸ்ட் படத்திற்கு முன்பு விஜய்யை வைத்து இவர் படம் இயக்கப்போவதாக சில செய்திகள் வெளியானது, ஆனால் அந்த திட்டம் குறித்து அடுத்தகட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அடுத்ததாக இவர் உலகத்தரம் வாய்ந்த அனிமேஷன் படத்தை இயக்குவதாக செய்திகள் வெளியானது. கடந்த இரண்டு வருடங்களாக இயக்குனர் தீவிரமாக அடுத்த படத்துக்கான கதையை எழுதி வருவதாக செய்திகள் வெளியானது. மேலும் இவர் தமிழ் சினிமாவின் பிரபலன்களான விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருக்காக கதை தயார் செய்து வைத்திருப்பதாகவும், விரைவில் இவர்கள் இருவருடன் படத்தை தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | மீண்டும் தாய் ஆனா ஐஸ்வர்யா ராய்? சமீபத்திய புகைப்படம் வைரல்!
இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் பற்றி வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல்களின்படி, இந்த இயக்குனர் பாலிவுட்டின் இரண்டு முக்கிய பிரபலங்களான ஷாருக்கான் மற்றும் சல்மான் கானை வைத்து படம் பண்ண இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனுடன் கூடுதல் தகவலாக இவர்கள் இருவரும் நடிக்கும் படத்தில் அமீர் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம், இந்த செய்தி பாலிவுட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மூன்று கான்களையும் வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் படம் உருவாக்கப்போவதாக வெளியான தகவல் எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தியில் அமீர்கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'கஜினி' படத்தின் ரீமேக்கிற்கு பாலிவுட் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து படம் வெற்றிபெற்றது. கடந்த 27 வருடங்களுக்கு முன்னர் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் ஆகிய இருவரும் 'கரண் அர்ஜுன்' என்கிற படத்தில் இணைந்து நடித்தனர். அதேசமயம் அந்த படத்தில் இவர்கள் கௌரவ வேடத்தில் மட்டுமே நடித்திருந்த நிலையில் இதனை வருடங்கள் கழித்து இரண்டு பெரிய நட்சத்திரங்களும் முழு நீள படத்தில் நடிக்கப்போகின்றனர். இந்த படத்திற்கான பணிகள் 2023ம் ஆண்டில் தொடங்கப்படும் என்று சில கூடுதல் தகவல்கள் தெரிவிக்கிறது.
மேலும் படிக்க | ‘வாரிசு’ படத்தில் விஜய்க்கு இப்படியொரு ரோலா? அதுவும் இதுவரை பண்ணாத கேரக்டர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ