மீண்டும் தாய் ஆனா ஐஸ்வர்யா ராய்? சமீபத்திய புகைப்படம் வைரல்!

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து இருக்கும் ஐஸ்வர்யா ராய் பச்சனின் சமீபத்திய விமான நிலைய புகைப்படம் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 20, 2022, 12:01 PM IST
  • நியூயார்க்கிற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற ஐஸ்வர்யா ராய்.
  • இன்று மும்பை விமான நிலையம் வந்தடைந்தார்.
  • இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மீண்டும் தாய் ஆனா ஐஸ்வர்யா ராய்? சமீபத்திய புகைப்படம் வைரல்! title=

முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் பச்சனின் சமீபத்திய ஏர்போர்ட் புகைப்படம் ரசிகர்களிடம் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.  பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.  இவர்களுக்கு ஆராத்யா என்ற ஒரு மகள் இருக்கிறார். அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் நியூயார்க்கில் விடுமுறையை கழித்துவிட்டு இந்தியா திரும்பினர். இந்த நட்சத்திர ஜோடி இன்று மும்பை விமான நிலையத்தில் தங்கள்  மகள் ஆராத்யா பச்சனுடன் காணப்பட்டனர்.  

rai

மேலும் படிக்க | தலைவரே! தலைவரே! விஜய்யின் வாரிசு படத்தில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா!

தாய் - மகள் இருவரும் கருப்பு நிற உடையுடன் விமான நிலையம் வந்தடைந்தனர்.  ஐஸ்வர்யா ராய் கருப்பு கோட் அணிந்த நிலையில், ஆராத்யா கருப்பு டிராக்சூட்டில் இருந்தார். நியூயார்க் சென்ற இவர்கள் அங்கு இருந்து ஒரு புகைப்படங்களை கூட சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யவில்லை.  விமான நிலையத்தில் கூட, இவர்கள் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவில்லை.  இந்நிலையில் விமான நிலையத்தில் ஒருவர் எடுத்த புகைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பது போல் தோற்றம் அளிக்கிறது.  இதனை பார்த்த ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கிறாரா? அதனால்தான் மறைந்து சொல்கிறாரா? கேள்வி எழுப்பி உள்ளனர். 

 

திருமணத்திற்கு பிறகு படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராய்.  தற்போது ஐஸ்வர்யா ராய் நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக உள்ளது.  சமீபத்தில் பிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் தங்களது 15வது திருமண நாளை கொண்டாடினர்.  ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் தாயீ அக்ஷர் பிரேம் கே, குச் நா கஹோ குரு, உம்ராவ் ஜான், தூம் 2, குரு, ராவணன் போன்ற பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

மேலும் படிக்க | தனது முதல் தெலுங்கு படத்தில் ஒப்பந்தம் ஆனா சூர்யா!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News