இயக்குனர் அவதாரம் எடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்! ஹீரோ யார்?
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பட தயாரிப்பு மற்றும் திரைக்கதை எழுதியதை தொடர்ந்து தற்போது இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.
ஆஸ்கார் விருது நாயகனான இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பல பரிமாணங்களில் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். இசையமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என்று பணியாற்றியவர் தற்போது ஒரு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். 'லே மஸ்க்' என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படமானது பாரிசில் நடக்கும் 2022ம் ஆண்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இவரது இசைக்கு அடிமையான பலர் இவரது புதுப்புது முயற்சிகளையும் உற்சாகமுடன் வரவேற்கின்றனர்.
மேலும் படிக்க | நெட்பிளிக்ஸில் தவறவிடக்கூடாத தமிழ் படங்கள்
ஏற்கனவே 2020ம் ஆண்டு வெளியான 'அட்கான் சட்கான்' என்கிற இசை சம்மந்தமான ஹிந்தி மொழி திரைப்படத்தை தயாரித்து இருந்தார். அதற்கு முன்னர் 2019ம் ஆண்டு வெளியான '99 சாங்ஸ்' என்கிற இசையை மையமாக கொண்டு உருவான படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் திரைக்கதை எழுத்தாளராக அறிமுகமானார். 81-வது அகாடமி விருதுகள் விழாவில் இவர் சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கார் விருதை வென்றார்.
தற்போது இவர் இயக்கியுள்ள இந்த லே மஸ்க் திரைப்படம், அவரது மனைவி சாய்ரா பானுவின் ஒருவரி கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கி இருக்கிறார். விர்ச்சுவல் ரியாலிட்டி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அதிக வாசனை உணர்வு கொண்ட ஒரு அனாதை பெண் வாழ்வில் செய்யும் செயல்களை அடிப்படையாக கொண்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மனைவிக்கு பிடித்த 'லே மஸ்க்' வாசனை திரவியத்தை பெயரையே இப்படத்திற்கு வைத்திருக்கின்றனர். 36 நிமிடங்கள் கொண்ட இந்த குறும்படத்தின் முழு கதையையும் குராவ் ஃபீனிக்ஸ் எழுதியுள்ளார், இதில் நோரா அர்னெசெடர் மற்றும் கை பர்னெட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில் ஓடிடியில் இப்படம் வெளியாக உள்ளது.
மேலும் படிக்க | ‘விக்ரம்’ படத்தின் கதை இதுதானா? அதிலும் இப்படி ஒரு சர்ப்ரைஸா?!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR