ஏஆர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரி: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரி நேற்று மாலை முதல் நடைபெற்றது. கடந்த மாதம் 12ஆம் தேதி நடைபெற இருந்த இந்த இசை கச்சேரி மழையால் ரத்து செய்யப்பட்டு நேற்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எப்பொழுதும் ஞாயிற்றுக்கிழமை என்றாலே ECR, OMR சாலை வெறிச்சோடி காணப்படும். ஆனால் ECR சாலையில் ஏ.ஆர் ரகுமானின் இசை கச்சேரி நேற்று நடைபெற்றதால் ECR சாலையில் தேவையற்ற வேலைகளுக்காக பயணிக்க வேண்டாம் என சென்னை போக்குவரத்து காவல்துறை தனது சமூக வலைத்தளங்களில் ஒரு அறிவிப்பு எச்சரிக்கை அறிவித்திருந்தது. 


மேலும் படிக்க | ஏ.ஆர் ரஹ்மான் கச்சேரியை கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள் - ரூ. 10 ஆயிரம் கொடுத்தும் சுத்த வேஸ்ட்...


மேலும் இசைக்கச்சேரி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம் என ரூ.2000 முதல் ரூ. 15 ஆயிரம் வரை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் இசைக்கச்சேரி நடைபெறும் இடத்திற்கு சென்றனர். ஆனால், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிகவும் மோசமாக இருந்ததாகவும், நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததாகவும் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.



 



இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கொந்தளித்துள்ள ரசிகர்கள், “3 மணிக்கு கேட் திறக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் 4 மணிக்கு மேல் ஆகியும் கேட் திறக்கப்படவில்லை” என்றும், கடுமையான ட்ராஃபிக் மற்றும் பார்க்கிங் குளறுபடிகளால் இசைநிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் செல்வதற்கே பல மணி நேரம் பிடித்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.



அதேபோல் ரூ.15 ஆயிரம் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி மறக்கவே முடியாத அளவிற்கு ஆகி விட்டது ஏஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரி என்று ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இதில் பணம் கொடுத்தும் பல ரசிகர்களால் கச்சேரி நடைபெறும் இடத்திற்குள் போக முடியவில்லை என்று கூறி உயிர் பிழைத்தால் போதும் என்று சொல்லி வீடு திரும்பினர். 


அதுமட்டுமின்றி டிக்கெட் வாங்கி மைதானத்திற்குள் சென்றவர்களாலேயும் இசை நிகழ்ச்சியை பார்க்கமுடியாத அளவிற்கு இருந்தது. தண்ணீர் கிடைக்கவில்லை. கழிவறை வசதி இல்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ரசிகர்கள் முன்வைத்தனர். 



இதனிடையே இளையராஜா ரசிகர்கள் ஏஆர் ரஹ்மா ரசிகர்களை சமூக வலைதளத்தில் கலாய்த்து வருகின்றனர். அதன்படி இதில் ஒருவே, "வாப்பா குமாரு..  மறக்குமா நெஞ்சம் Concert போய்.. இப்படி மன நோயாளி மாறி வந்திருக்க".. என்று பதிவிட்டு நக்கல் அடித்து வருகின்றனர்.


மற்றொருவர்.. "மறக்குமா நெஞ்சம்...Rs. 5000 டிக்கெட்டை மறுத்துவிட்டு ஓடு நெஞ்சமே என்று ஆனது. இதுவே இளையராஜா வா இருந்தா...? ரஜினியா இருந்தா...? என்று பதிவிட்டுள்ளார்.



 



 



 



மேலும் படிக்க | சுத்தமா‌ Vibe ‌இல்ல... கடுப்பாக இருந்ததா‌ விஜய் ஆண்டனி‌ கச்சேரி...? - ரசிகர்கள் ரியாக்சன்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ