சுத்தமா‌ Vibe ‌இல்ல... கடுப்பாக இருந்ததா‌ விஜய் ஆண்டனி‌ கச்சேரி...? - ரசிகர்கள் ரியாக்சன்!

Vijay Antony Chennai Concert: சென்னையில் நேற்று நடைபெற்ற விஜய் ஆண்டனியின் இசை கச்சேரி குறித்து புகார் தெரிவித்து ரசிகர் ஒருவர் போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 10, 2023, 06:49 PM IST
  • பாடல் வரிகளை ஒழுங்காக படிக்கவில்லை என குற்றச்சாட்டு.
  • மேலும், பாடல்கள் சரியாக கேட்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
  • சுத்தமாக வைப் இல்லை என்ற வகையில் அதில் குறிப்பிட்டுள்ளார்.
சுத்தமா‌ Vibe ‌இல்ல... கடுப்பாக இருந்ததா‌ விஜய் ஆண்டனி‌ கச்சேரி...? - ரசிகர்கள் ரியாக்சன்! title=

Vijay Antony Chennai Concert: தற்போதைய சீசன் சென்னையில் கச்சேரி சீசனாக உள்ளது. மார்கழி மாதத்திற்கு இன்னும் சில மாதங்கள் இருந்தாலும் சினிமா இசையமைப்பாளர்களின் இசை கச்சேரி தான் அதிக வரவேற்பை பெறும் ஒன்றாக மாறிவிட்டது. சினிமா இசையமைப்பாளர்கள் மட்டுமின்றி பிரதீப் குமார், கிரிஷ், கார்த்தி உள்ளிட்ட பாடகர்களும் சமீப காலமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். 

சென்னையில் சமீபத்தில் சுயாதீன பாடகர் கேப்ர் வாசுகி நடத்திய இசை நிகழ்ச்சி பலத்த வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல், மொட்ட மாடி மியூசிக் போன்ற சுயாதீன குழுக்கள் நடத்தும் இசை நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது. சென்னையில் மட்டுமின்றி கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, பெங்களூரு போன்ற தமிழ் ரசிகர்கள் அதிகம் இருக்கும் இடங்களிலும் இதுபோன்ற இசை நிகழ்ச்சிகள் தற்போது பெருகிவிட்டன.

இசையமைப்பாளர் தேவா அவரது இத்தனை ஆண்டு திரை வாழ்வில், அதாவது இசையமைப்பாளராக மாறிய பின் முதல் முறையாக கடந்தாண்டு தான் இசை கச்சேரியை நடத்தினார். அந்த அளவிற்கு தற்போது இசை நிகழ்ச்சிக்கு வரவேற்பு உள்ளது. இசைஞானி இளையராஜா சிறு சிறு இடைவெளிகளில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்துவார். அவர் சென்னையில் கடந்தாண்டு மார்ச் மாதம் இசை நிகழ்ச்சியை நடத்தினார். இவர்களை தவிர அனிருத், யுவன் சங்கர் ராஜா ஆகியோரும் சென்னையில் இசை நிகழ்ச்சியை நடத்தினர்.

மேலும் படிக்க | ஜெயிலர் ப்ளாக் பஸ்டர் ஹிட்..! படக்குழுவினருக்கு தங்க நாணயம் பரிசு..!

ஏ. ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி கடந்த மாதம் மழை காரணமாக தள்ளிப்போன நிலையில், இன்று மீண்டும் அதே இடத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அதிக போக்குவரத்து நெருக்கடி இருக்கும் என்பதால் ரசிகர்கள் அதற்கு தகுந்தாற்போல் திட்டமிட்டு முன்கூட்டிய வர வேண்டும் எனவும், பிறர் பழைய மகாபலிபுரம் சாலையை பயன்படுத்துமாறும் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி உள்ளனர். அந்த அளவிற்கு அதிக கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. அடுத்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜூம் இந்த கான்சர்ட் கலாச்சாரத்தில் இணைந்துள்ளார். 

இந்த சூழலில், சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டவரான விஜய் ஆண்டனியின் இசை கச்சேரி நேற்று நடைபெற்றது. அவ்வப்போது மழை பெய்தாலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து இந்த நிகழ்ச்சியை கொண்டாடி தீர்த்தாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் குறைந்தபட்ச டிக்கெட் ரூ. 1500 ஆக இருந்தது. இருப்பினும், இளைஞர்கள், மாணவர்கள் இந்நிகழ்வில் அதிகம் குவிந்தனர் எனலாம். 

ஆனால், இந்த கச்சேரி சரியாக ஏற்பாடு செய்யப்படவில்லை எனவும் மிகவும் ஏமாற்றமாக அமைந்ததாகவும் ஒருவர் சமூக வலைதளங்களில் போட்ட பதிவு அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்த பதிவில்,"நீங்கள் மேடையில் பாடப்போகிறீர்கள் என்றால், ஏன் சற்று பயிற்சி எடுத்துவிட்டு வந்து பாடக்கூடாது...? உங்களுக்கு பாடல் வரிகள் தெரியாவிட்டால், பாடல் வரிகள் அடங்கிய தாள்களை வைத்தோ அல்லது வேறு வகையிலோ பாடல் வரிகளை பார்த்து படிக்கலாம் அல்லவா..." என விஜய் ஆண்டனி மற்றும் அவரின் குழுவினரை குறிப்பிட்டு எழுதியுள்ளார். வேறு சிலரும் X தளத்தில் இதே குற்றச்சாட்டை பதிவிட்டிருந்ததை பார்க்க முடிந்தது.

மேலும்,"மைக் வேலை செய்யல, பாடல் வரிகள் தெரியல, சத்தம் ஒரு பக்கம், பாட்டின் குரல் ஒரு பக்கம், எல்லாத்துக்கும் மேல் ஆடியன்ஸ் ஏன்கேஜ்மெண்டு-னு ஒரு கூத்து பண்ணாங்க" என விழா ஏற்பாடு மீதும் குற்றம் சுமத்தினார். இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்காக தன்னால் பொய்யாக நடிக்க முடியாது என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதில், சில வார்த்தைகள் பொதுவெளியில் குறிப்பிட இயலாததாகவும் உள்ளது. இருப்பினும், அவர் விஜய் ஆண்டனிக்கு கோரிக்கையும் விடுத்துள்ளார். அதாவது,"அடுத்த முறை கொஞ்சம் பாட்ட மனப்பாடம் பண்ணிட்டு வா அண்ணா..." என குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், அந்த புகைப்படம் மட்டும் சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டிருப்பதால் இதனை பதிவு செய்த பதிவர் குறித்த விவரம் தெரியவில்லை. இது ஒருபுறம் இருக்க, விஜய் ஆண்டனி கச்சேரிக்கு நேரில் சென்ற வேறொரு ரசிகரும், சென்னை சேர்ந்தவருமான பிரசாந்திடம் இதுகுறித்து கேட்டபோது,"நான் கடைசி அடுக்கில் நின்று கொண்டு தான் பாடல்களை கேட்டேன். எனக்கு சரியாக தான் கேட்டது. 

மழை பெய்த பின் சற்று சத்தம் வித்தியாசமாக மாறினாலும், பின்னர் சரியாகிவிட்டது. அவ்வப்போது விஜய் ஆண்டனியும் மேடையில் இருந்து கொண்டு சத்தம் கேட்கிறதா இல்லையா என்பதை ரசிகர்களிடம் உறுதி செய்துகொண்டார். வேறு பிரச்னை ஏதும் இல்லை" என்று கூறினார். மேலும், ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முழுவதும் ரசிகர்கள் தங்களின் கொண்டாட்ட வீடியோக்களை பதிவிட்டபடியே இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ‘தளபதி 68’ படப்பிடிப்பு ‘இந்த’ தேதியில் தொடக்கம்..? வெளியானது ருசிகர தகவல்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News