இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் முதல் பாகம் பெரும் கவனத்தைப் பெற்றது. சமீப காலத்தில் பாகுபலிக்குப் பிறகு தென்னிந்தியத் திரைப்படம் ஒன்று இந்திய அளவில் பேசப்பட்டது என்றால் அது கேஜிஎஃப்தான் என உறுதியாகச் சொல்லலாம். அந்த அளவுக்கு ஓவர் நைட்டில் உலக வெவல் பாப்புலர் ஆனது அப்படம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து இதே கூட்டணியில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. வருகிற 14ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆகவுள்ள இப்படம் வசூலில் பெரும் சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கே.ஜி.எஃப்-2 படத்தின் சென்சார் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, பீரியட் ஆக்சன் படமான இப்படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க| ‘பீஸ்ட்’டை இவங்களாம் பாக்கக் கூடாதாம்! - ஏன் தெரியுமா?


                                                 


அந்த வகையில், 18 வயது நிரம்பியவர்கள் இந்தப் படத்தைக் கண்டுகளிக்கலாம். 12 வயதுக்கு குறைவான சிறார்கள், பெற்றோர்களின் வழிகாட்டுதலின்படியே இப்படத்தைக் காணமுடியும். ரன்னிங் டைமைப் பொறுத்தவரை 2 மணி நேரம் 48 நிமிடங்கள் மற்றும் 06 விநாடிகளை இப்படம் கொண்டுள்ளது. கேஜிஎஃப்பின் முதல் பாகம் 2 மணி நேரம் 36 நிமிடங்களைக் கொண்டிருந்த நிலையில் இரண்டாம் பாகம் சுமார் 12 நிமிடங்கள் கூடுதலாக உள்ளது.


நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் வருகிற 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படம் அதற்கு மறுநாள் வெளியாகவுள்ளது. பீஸ்ட்டுக்கும் சென்சார் போர்டு U/A சான்றிதழையே வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பற்றி எரியும் Beast VS KGF-2: விஜய் குறித்து என்ன சொன்னார் யஷ்?!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR