இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் உள்ள பகையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அந்தப் படத்தில் கலை இயக்கம் பெரிதும் பேசப்பட்டது. குறிப்பாக சோழர்கள் வாழும் இடமான அந்த மலை குகை, பாண்டியர்கள் வணங்கும் தெய்வம் என கலை இயக்கம் படு நேர்த்தியாக இருந்தது. அந்தப் படத்தில் மட்டும் தத்ரூபமாக மொத்தம் 18 செட்டுகள் போடப்பட்டன. அத்தனை செட்டுகளையும் வடிவமைத்தவர் கலை இயக்குநர் டி.சந்தானம். அதிலிருந்து அவர் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் கலை இயக்குநராக மாறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து இந்திய அளவில் பிரபல இயக்குநரான ஏ.ஆர். முருகதாஸின் ஆஸ்தான கலை இயக்குநர்களில் ஒருவராகவும் வலம் வந்தார். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த விஜய் நடிப்பில் சர்கார், ரஜினி நடிப்பில் தர்பார் உள்ளிட்ட படங்களுக்கு கலை இயக்கத்தை சிறப்பாக செய்து முடித்தார். தற்போது கௌதம் கார்த்தியை வைத்து முருகதாஸ் 1947 என்ற படத்தை இயக்குகிறார். அதற்கும் சந்தானமே கலை இயக்குநர் ஆவார்.



மேற்கூறிய படங்கள் மட்டுமின்றி ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தெய்வ திருமகள், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான டிமாண்ட்டி காலனி, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே தந்திரம், மகான் உள்ளிட்ட ஏராளமான படங்களில் கலை இயக்குநராக பணியாற்றி முத்திரை பதித்திருக்கிறார்.


மேலும் படிக்க | 500 கோடி ரூபாய் பட்ஜெட்... ராமாயணத்துக்கு தயாராகும் அல்லு அர்ஜுன்


இந்நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக டி.சந்தானம் மரணம் அடைந்து விட்டதாக, தகவல்கள் வெளியாகி திரையுலகினர் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.


மேலும் படிக்க | மறைந்த 'பூ' ராமு நடித்த திரைப்படம் கோவா திரைப்பட விழாவுக்கு தேர்வு


மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?


மேலும் படிக்க | கமல் ஒரு மங்கி... ஜிபி முத்துவுக்கு எஸ்.வி.சேகர் ஆதரவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ