மறைந்த 'பூ' ராமு நடித்த திரைப்படம் கோவா திரைப்பட விழாவுக்கு தேர்வு

கோவா திரைப்பட விழாவில், இந்தியன் பனோரமா பிரிவில் தமிழ் திரைப்படமான 'கிடா' தேர்வாகியுள்ளது.        

Written by - Sudharsan G | Last Updated : Oct 23, 2022, 08:30 PM IST
  • கோவா திரைப்பட விழாவில் 3 தமிழ் படங்கள் திரையிடப்படுகின்றன.
  • 'பூ' ராமு, காளிவெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.
  • அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இப்படத்தை இயக்கியுள்ளார்.
மறைந்த 'பூ' ராமு நடித்த திரைப்படம் கோவா திரைப்பட விழாவுக்கு தேர்வு title=

புகழ்பெற்ற திரைப்பட விழாவாக  80 வருடங்களாக நடந்துவரும், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோராமா பிரிவில், 'ஜெய் பீம்' படத்துடன் 'கிடா' எனும் தமிழ் படமும் தேர்வாகி அசத்தியுள்ளது. 

ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட்  இயக்கத்தில், சமீபத்தில் மறைந்த நடிகர் 'பூ' ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தமிழ் சினிமாவை உயர்த்தி பிடிக்கும் உன்னத படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் 'கிடா'. 

மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

Kida

இப்படம் முழுதாக முடிந்தவடைந்த நிலையில், திரைக்கு வரும் முன்னதாகவே கோவா திரைப்பட விழாவிற்கு தேர்வாகி அசத்தியுள்ளது. கோவா திரைப்படவிழாவில் இந்தியன் பனோராமா பிரிவில் மூன்று தமிழ்ப் படங்களில், ஒரு படமாக இப்படம் தேர்வாகியுள்ளது.  

மேலும் படிக்க | பிக்பாஸ் போட்ட பலே பிளான்! ஜிபி முத்துவுக்கு பதிலாக உள்ளே வரப்போகும் மாஸ் போட்டியாளர்

தமிழர்களின் வாழ்வியலை அச்சு அசலாக  திரையில் வடிக்கும், ஒரு மாறுபட்ட காவியமாக இப்படம் உருவாகியுள்ளது. புதுமுகங்களின் முயற்சியில் உருவாகியுள்ள இப்படத்தை 'கிருமி', 'ரெக்க' படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த இயக்குநர் ரா.வெங்கட் இயக்கியுள்ளார். 

Kida

தெலுங்கு திரையுலகில் 35 வருடங்களாக பல வெற்றிப்படங்களை தந்த ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா இப்படத்தை தயாரித்துள்ளனர். 'பூ' ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மேலும் படிக்க | ரஜினிகாந்த் - ஷங்கர் இடையே ஏற்படப்போகும் மிகப்பெரிய மோதல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News