Cinema News: பிரபல ஓவியர் கொரோனாவால் உயிரிழப்பு: வருத்தத்தில் திரையுலகினர்
ஓவியக் கலைஞன் இளையராஜா கொரோனா வைரஸ் காரணமாக மரணமடைந்தார்.
கும்பகோணம் அருகேயுள்ள செம்பியவரம்பில் எனும் கிராமத்தை சேர்ந்த பிரபலமான ஓவியர் இளையராஜா. இவர் சென்ற வாரம் தனது அக்கா மகளின் திருமணத்துக்காக கும்பகோணத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அவருக்கு உடலில் ஜலதோஷம், காய்ச்சல் உள்ளிட்ட தொந்தரவுகள் காணப்பட்ட நிலையில் ஓவியர் இளையராஜா உடல் நலக்குறைவு காரணமாக எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கொரோனா (Covid-19) தொற்றானது நுரையீரல் முழுவதும் பரவி நுரையீரலை முழுமையாக தாக்கியிருந்தது.
ALSO READ | Shocking News: "மேயாத மான்” பட இயக்குனர் குடும்பத்தில் 14 பேரை மேய்ந்து தீர்த்த கொரோனா!
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஓவியர் இளையராஜா (Artist Ilayaraja) உயிரிழந்தார். அவரது மறைவிற்கு ஓவிய கலைஞர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஓவியர் இளையராஜா மறைவு குறித்து இயக்குனர் பார்த்திபன் கூறியிருப்பதாவது: நண்பன்/அன்புத் தம்பி ஓவியர் இளையராஜா மறைவு, மன அதிர்ச்சியையும் தாளா துயரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆறுதல் எனக்கே தேவையெனும் போது அவர் குடும்பத்தாருக்கு எப்படி? என்று அவர் ட்வீட் பதிவு செய்துள்ளார்.
ALSO READ | 'நீங்கள் எனக்கு உதவுவீர்களா?': பி.சுசீலா ஏ.ஆர்.ரஹ்மானிடம் வைத்த சுவாரசியமான கோரிக்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR