சென்னை ஆழ்வார் பேட்டைக்கு அருகில் உள்ள டிமான்டி காலனி எனும் பங்களாவை வைத்து எடுக்கப்பட்ட படம், டிமான்டி காலனி. இதில், அந்த பங்களாவை தவிர பிற அம்சங்கள் எல்லாமே புனையப்பட்ட கதை. இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிமான்டி காலனி:


2015ஆம் ஆண்டு வெளியாகியிருந்த டிமான்டி காலனி திரைப்படத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். வழக்கமான பேய் கதைகள் போல இல்லாமல், வித்தியாசமான பாணியில் இப்படத்தை இயக்கியிருந்தார் அஜய் ஞானமுத்து. படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது. 


மேலும் படிக்க | மாரி செல்வராஜின் சம்பவமா? மாரி செல்வராஜிற்கு சம்பவமா? ‘மாமன்னன்’ ட்விட்டர் விமர்சனம்..!​


இரண்டாம் பாகம்..


2015ஆம் ஆண்டு வெளியான டிமான்டி காலனி படத்திற்கு பிறகு இதுகுறித்த அறிவிப்புகள் எதுவும் பெரிய அளவில் வெளியாகவில்லை. இதையடுத்து, கடந்த ஆண்டு, சர்ப்ரைஸாக இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த படத்திலும் உதயநிதியே கதாநாயகனாக நடிக்கிறார். பிரபல நடிகை பிரியா பவானி சங்கர், கதாநாயகியாக நடிக்கிறார். 


படப்பிடிப்பு நிறைவு...


கடந்த சில நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு விருவிருப்பாக நடைப்பெற்று வந்தது. இதில், அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் எதுவும் இன்னும் நிறைவடையவில்லை. 


எப்போது ரிலீஸ்..?


டிமான்டி காலனி படத்தை இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் இதன் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் ஆரம்பித்தால் செப்டம்பர ரிலீஸ் சாத்தியமாகும் என கூறப்படுகிறது. பிற பேய் படங்களை விட மிகவும் குறைவான பட்ஜெட்டிலும், திறமையான நடிகர்-நடிகைகளை வைத்து இப்படம் தயாராகி வருவதால் இப்பட ரிலீஸிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர். அது மட்டுமன்றி இப்படத்தின் போஸ்டரில்  “Vengeance of the Unholy" (தீய ஆத்மாவின் பழிவாங்கல்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இப்படம் தமிழ் சினிமாவின் பயங்கர பேய் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. 


படக்குழு..


அஜய் ஞானமுத்து டிமான்டி காலனி படத்தை இயக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். கோப்ரா படத்தில் நடித்து பிரபலமான மீனாட்சி கோவிந்தராஜன், பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா, அருண் பாண்டியன், முத்துக்குமரன் ஆகிய பலர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். 


படத்தின் கதை..


2015ஆம் ஆண்டு வெளியாகியிருந்த டிமான்டி காலனி படத்தில் நான்கு இளைஞர்களையும் அவர்களை சுற்றி நிகழும் அமானுஷ்ய சம்பவங்களையும்தான் கதையாக வைத்திருந்தனர். சரியான வேலைக்கு செல்லாத 4 இளைஞர்கள், குடிப்பதற்காக போகும் இடம்தான் டிமான்டி காலனி. அந்த இடத்திற்கு சென்றுவிட்டு வீடி திரும்பும் அவர்கள், அவுஜா பலைகையில் (ouija board) ஆவியுடன் பேசுகின்றனர். இதன் மூலம் பேய் இருப்பதை தெரிந்து கொள்கின்றனர். அந்த பேய் பிரிட்டீஷ் ஆட்சிகாலத்தின் போது உயிரிழந்த டிமான்டி என்பதும், அவருக்கு சொந்தமான ஒரு பொருளை 4 நண்பர்களில் ஒருவர் எடுத்து வந்து வீட்டில் எடுத்து வைத்திருப்பதும் தெரிய வருகிறது. இதையடுத்து ஒவ்வொருவராக இறக்கின்றனர். கடைசியில், நண்பர்கள் ஒருவருக்குள் புகுந்திருக்கும் பேய் தனது உடைமையை எடுத்து செல்வது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதையடுத்து நிகழ்வது டிமான்டி காலனி படத்தின் 2ஆம் பாகத்தின் கதையா? அல்லது வேறு ஒரு நிகழ்வை படமாக எடுத்திருக்கின்றனரா என்பது படம் வெளிவந்த பிறகுதான் தெரியும். 


மேலும் படிக்க | ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன்..! படத்தின் பெயர் என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ