முகநூல் பதிவு மூலம் மனைவிக்கு அஞ்சலி, மக்களுக்கு பாடம்: இயக்குனரை புகழும் இணைய வாசிகள்
தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள இயக்குனர் அருண்ராஜா தனது மறைந்த மனைவிக்கு முகநூலில் அஞ்சலி செலுத்தினார். அது மட்டுமல்லாமல், மிக முக்கியமாக, கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலையால் சமூகம் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்த முக்கியமான செய்தியையும் அவர் வெளியிட்டுள்ளார்.
சென்னை: கொரோனா தொற்றின் தாக்கம் நாட்டை பாடாய் படுத்தி வருகிறது. பலர் உயிர் இழந்த நிலையில், பலர் நெருங்கிய உறவுகளை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழ் சினிமா துறையிலும் கொரோனா தொற்று காரணமாக பல இழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில், 'கனா' படம் மூலம் உச்சத்திற்கு சென்ற இயக்குனர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா இந்த கொடிய வைரசால் உயிர் இழந்தார். அவருக்கு வயது 38.
இயக்குனர் அருண்ராஜா காமராஜும் தொற்றால் பாதிக்கப்பட்டு தனது மனைவியுடன் சிகிச்சையில் இருந்தார். கொரோனா (Corona) பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து அவர் தனது மனைவியின் இறுதி சடங்குகளை செய்த காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி நெகிழ வைத்தது.
தற்போது தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள இயக்குனர் அருண்ராஜா தனது மறைந்த மனைவிக்கு முகநூலில் அஞ்சலி செலுத்தினார். அது மட்டுமல்லாமல், மிக முக்கியமாக, கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலையால் சமூகம் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்த முக்கியமான செய்தியையும் அவர் வெளியிட்டுள்ளார். அவரது கண்களுக்கு முன்பே அந்த கொலையாளி வைரஸ் அவரது மனைவி சிந்துவின் உயிரை பறித்ததாகவும், தன் சுவாசத்தையும் நிறுத்த முயன்றதாகவும் அவர் கண்ணீருடன் கூறியுள்ளார்.
மருத்துவமனையில் இருந்தபோது பல நல்ல மனம் படைத்தவர்கள் அவருக்கும் அவரது மனைவிக்கும் உதவியதாகவும், அவர்களுக்காக பிரார்த்தனை செய்ததாகவும் இயக்குனர் கூறினார். அதையும் மீறி இந்த வைரஸ் தனது மனைவியை தன்னிடமிருந்து பிரித்துவிட்டதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார். இந்த வைரஸ் இன்னும் எத்தனை பேரின் உயிரை பறிக்க திட்டமிட்டுள்ளதோ என்றும் அவர் வியந்தார்.
ALSO READ: அதிர்ச்சி! கொரோனா தொற்று பாதிப்பால் கில்லி பட நடிகர் மரணம்!
முட்டாள்தனமான துணிச்சல் மற்றும் அர்த்தமற்ற பயம் காரணமாக பெரும்பாலான மரணங்கள் (Corona Deaths) நிகழ்கின்றன என்று அருண்ராஜா சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பொதுவான எதிரியை எதிர்த்துப் போராட ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தையும், ஒவ்வொருவரும் தங்களை ஒரு முன்னணி கோவிட் போர்வீரராக நினைத்து, தங்களது அன்பானவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். கண்ணுக்கு தெரியாத இந்த எதிரியை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழி, ஒற்றுமையும், ஒருவருக்கொருவர் அக்கறையை காட்டுவதும், பாதுகாப்பாக இருப்பதும்தான் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
தன்னையும் தன் மனைவி சிந்துஜாவையும் காப்பாற்ற கடுமையாக பாடுபட்ட அனைத்து முன்னணி கோவிட் 19 வீரர்களுக்கும் எப்போதும் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று அருண்ராஜா கூறியுள்ளார். இறுதியாக, கொடூரமான இந்த கொலையாளி வைரஸ் காரணமாக வேறு எந்த உயிரும் போகாத நிலை வரும்போதுதான், இதனால் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையும் என்று அவர் வலியுறுத்தினார்.
அருண்ராஜா காமராஜ் சமூகத்திற்கு இப்போது மிகவும் தேவையான இந்த செய்தியை சமூக வலைதளத்தில் வெளியிட்டதற்காக சமூக ஊடக பயனர்கள் (Social Media) அவரை பாராட்டி வருகின்றனர். தனது மனைவிக்கு அஞ்சலி செலுத்திய அதே வெளையில் மக்களுக்கான விழிப்புணர்வு செய்தியையும் பகிர்ந்துகொண்டதற்காக நெட்டிசன்கள் அவரை புகழ்ந்து வருகிறார்கள்.
ALSO READ: இயக்குனர் ஷங்கரின் தாயார் காலமானார்: சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR