சென்னை: நாட்டில் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை மக்களை பாடாய் படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் தொற்றின் அளவு அதிகரிப்பதோடு இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா தொற்றை (Coronavirus) நாட்டிலிருந்து ஒழிக்கவும், தங்களை தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், மக்கள் பல புதிய வழிகளை கையாண்டு வருகின்றனர். தமிழகத்தின் கோயம்பத்தூரில் சிலர் கொரோனா தேவிக்கான ஒரு கோயிலைக் கட்டியுள்ளனர்.
இந்த கொரோனா தேவி கோயில், 1900 களை நினைவூட்டுகிறது. ஆம்!! அப்போது கொடூரமாக பரவிய ப்லேக்கின் காரணமாக பலர் இறந்தனர். அப்போது சிலர் ஒன்றாக சேர்ந்து 'ப்ளேக் மாரியம்மன்' கோயிலை உருவாக்கினார்கள்.
இந்த கோயில் கோயம்புத்தூர் (Coimbatore) மாவட்டத்தில் பிளேக் தொற்று தீவிரமானபோது கட்டப்பட்டது. அதில் ப்ளேக் மாரியம்மனின் ஒரு சிலையும் நிறுவப்பட்டது.
ALSO READ: 'யாரப்பாத்து....?' என கூறி மாஸ்க் அணிய மறுத்த மருத்துவர்: வைரல் ஆன தரமான சம்பவம்
தற்போது கட்டப்பட்டுள்ள கொரோனா தேவியின் இந்த கோயில் கோயம்புத்தூர் நகரின் புறநகரில் உள்ள இருகூருக்கு அருகிலுள்ள காமாட்சிபுரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலை காமாட்சிபுரம் ஆதினம் அதிகாரிகள் தங்கள் வளாகத்தில் நிறுவியுள்ளனர்.
காமாட்சிபுரம் ஆதினத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி, 'கொரோனா தேவி ஒரு கருப்பு கல் சிலை. இது 1.5 அடி உயரம் கொண்டது, இந்த தீவிர நோயிலிருந்து தேவி மக்களை காப்பாற்றுவார் என்று நாங்கள் நம்புகிறோம்' என்று கூறினார். தென்னிந்தியாவில் கொரோனா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இரண்டாவது கோயில் இதுவாகும். முன்னதாக கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கடக்கலில் இதுபோன்ற ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது.
இந்த கொரோனா தேவி கோயிலில் 48 நாள் மகா யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இந்த யாகத்தில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் ஆலய பணியாளர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்றும் கோயில் சார்பில் கூறப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR