'விருமன்' படத்தை தொடர்ந்து இயக்குனர் முத்தையா நடிகர் ஆர்யாவை வைத்து 'காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம்' படத்தை இயக்கியுள்ளார்.  சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' படத்தின் மூலம் பிரபலமான நடிகை சித்தி இத்னானி இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.  ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்தில் பிரபு, பாக்கியராஜ், சிங்கம்புலி, நரேன், தமிழ், மதுசூதன ராவ், அவினாஷ் போன்ற பலர் நடித்துள்ளனர்.  கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது.  சமீபத்தில் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து இருந்தது கருப்பு நிற வேஷ்டி சட்டையணிந்து, முறுக்கு மீசை தாடியுடன், தொடை தெரியும்படி வேஷ்டியை கட்டிக்கொண்டு நாற்காலியில் கெத்தாக அமர்ந்து இருக்கும் போஸ் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருக்கிறது.  கடந்த மார்ச் 31ம் தேதியன்று இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Cook With Comali: வந்தவுடன் எலிமினேட் ஆகும் ‘இந்த’ போட்டியாளர்..! வாழைப்பழ டாஸ்க்தான் காரணமா?


படத்தின் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்திருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள படத்தின் ட்ரைலர் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.  இரண்டு கிராமத் தலைவர்கள் இருக்கும் ஒரு கிராமத்தைக் காட்டுகிறது.  மேலும் கிராமத்தில் எந்த முடிவும் ஜமாத் மற்றும் சபா ஒப்புக்கொண்ட பிறகுதான் எடுக்கப்படும் என்றும், ஒரு பெண் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு பலர் இறந்துவிடுவார்கள் என்றும் வசனங்கள் வீடியோவில் ஒலிக்கிறது.  சித்தி இத்னானி இப்படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்தின் ட்ரைலரில் அவர் பேசும் வசனத்தின் மூலம் தெரிகிறது.  நடிகர் ஆர்யா படத்தில் 'காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம்' என்கிற பெயரில் அறிமுகமாகிறார்.  பக்கா கிராமத்தானாக ஆர்யா இப்படத்தில் இருக்கிறார், சிறந்த ஆக்ஷன் என்டர்டெயினர் படமாக இப்படம் அமைந்துள்ளது.   காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கத்தின் வருகை, அய்யனாரும் அல்லாவும் ஒன்றே என்றும், ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் கிராம மக்களுக்கு புரிய வைக்க முயல்வதால் அனைத்தையும் மாற்றுகிறார்.  



முத்தையா படங்கள் என்றாலே கிராமத்து வாசம் மணக்கும், அதைப்போலவே இந்த படமும்  கிராமப்புற பின்னணியில் அமைந்த ஒரு மாஸ் ஆக்‌ஷன் என்டர்டெய்னராக இருக்கும் என்று டிரைலர் காட்டுகிறது.  'காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம்' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் மற்றும் படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.  இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் ஜூன் 2-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.  வெங்கட் ராஜன் படத்தொகுப்பையும், கலை இயக்கம் வீரமணி கணேசனும் செய்கிறார்.  ஸ்டண்ட் கோரியோகிராஃபியாக அனல் அரசு பணியாற்றுகிறார், முன்னணி நடன இயக்குனர்கள் பாபா பாஸ்கர், ஷோபி, சாண்டி, ஜானி, ஷெரிப் மற்றும் சதீஷ் ஆகியோர் இப்படத்திற்காக இணைந்துள்ளனர்.


மேலும் படிக்க | Cannes: கேன்ஸ் திரைப்பட விழா சிவப்பு கம்பள வரவேற்பு பெற்ற சேலை கட்டிய பாலிவுட் தேவதைகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ