மம்முட்டியுடன் சேர்ந்து நடிக்கும் அதுல்யா ரவி!
தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ஒரு சில திரைப்பட நடிகைகளில் அதுல்யா ரவியும் ஒருவர்.
தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ஒரு சில திரைப்பட நடிகைகளில் அதுல்யா ரவியும் ஒருவர். இவர் 2017-ம் ஆண்டு 'காதல் கண் கட்டுதே' என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இவர் 'நாகேஷ் திரையங்கம்' என்கிற படத்தில் நடிக்க தான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் முதலில் ரிலீசான படம் 'காதல் கண் கட்டுதே'. இந்தப்படம் வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் பார்வையாளர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.
அதனைத் தொடர்ந்து ஏமாலி, நாகேஷ் திரையரங்கம், நாடோடிகள்-2 , அடுத்த சாட்டை, சுட்டுபிடிக்க உத்தரவு போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது முருங்கக்காய் சிப்ஸ், எண்ணித்துணிக ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல இருப்பதால் இவர் அனைவரையும் எளிதாக கவர்ந்திழுத்துள்ளார். இருப்பினும் இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை என்பதே நிதர்சனம்.
இதனையடுத்து தற்போது அதுல்யாவிற்கு தெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான 'சைரா நரசிம்ம ரெட்டி' என்ற படத்தை இயக்கிய சுரேந்தர் ரெட்டி நடிகர் அகிலை நாயகனாக வைத்து இயக்கும் ஒரு படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்க அதுல்யாவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
அந்த படத்திற்கு 'ஏஜென்ட்' என்று டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதில் மற்றொரு கதாநாயகியாக சாக்ஸி வைத்தியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் நடிகை அதுல்யாவிடம் இது தொடர்பாக பேசி வருகின்றனர்.
ALSO READ 'டிக்டாக்' சுகந்தி கைது! பல பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR