சிவகார்த்திகேயனின் அயலான் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!
Ayalaan Movie Review: ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ள அயலான் படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Ayalaan Movie Review: கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அயலான் படம் பல்வேறு காரணங்களால் வெளிவராமல் இருந்தது. ஆனாலும், கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாகியும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு குறையாமல் இருந்து வந்தது. ஒவ்வொரு முறையும் இந்த படம் வெளியாகும் என்ற அறிவிப்பு வந்து பின்னர் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்நிலையில், தற்போது பொங்கல் விருந்தாக இந்த படம் ஒரு வழியாக வெளியாகி உள்ளது. இந்தப் படத்திற்காக சிவகார்த்திகேயன் சம்பளம் வாங்காமல் நடித்துள்ளார் என்றும், படம் வெளியாவதற்கு ஒரு பெரிய தொகையை கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அயலான் படத்தை கேஜேஆர் ராஜேஷ் தயாரிக்க சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்தி சிங், இஷா கோபிகாடர், பானுப்பிரியா, யோகி பாபு, கருணாகரன், சரத் கேல்கார் ஆகியோர் நடித்துள்ளனர். ஏஆர் ரகுமான் முதல் முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைத்துள்ளார்
ஆரியான் என்ற நிறுவனம் பூமியை ஆழமாக துளையிட்டு அங்கிருந்து புது வகையான எரிவாயுவை எடுக்க முயற்சி செய்கிறது. ஆனால் பூமியில் உள்ள சக்தியால் ஆழமாக தோண்ட முடியவில்லை, இதனால் விண்ணில் இருந்து வந்த எரிகல்லை தோண்ட முயற்சி செய்கின்றனர். இதன் ஆரம்ப கட்ட முயற்சியின் போது ஒரு நகரமே அழிந்து விடுகிறது. இந்த திட்டத்தை மீண்டும் சென்னையில் தொடங்க முயற்சி செய்கின்றனர். மறுபுறம் கொடைக்கானல் பூம்பாறை என்ற கிராமத்தில் சிவகார்த்திகேயன் வசித்து வருகிறார், இவர் வேலை காரணமாக சென்னை வருகிறார். அப்போது பூமிக்கு அந்த விண்கல்லை தேடி ஏலியன் வருகிறது. சிவகார்த்திகேயனும் அந்த ஏலியனும் இணைந்து இந்த திட்டத்தை நடக்க விடாமல் தடுகின்றனர். இறுதியில் என்ன ஆனது என்பதே அயலான் படத்தின் கதை.
முதலில் இப்படி ஒரு கதையை யோசித்து படமாக எடுத்ததற்கு இயக்குனர் ரவிக்குமாருக்கு தனி பாராட்டுக்கள். முழுக்க முழுக்க சிஜியை நம்பி படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கொடைக்கானல் பூம்பாறையில் கதை தொடங்குகிது. சிவகார்த்திகேயன் ஏலியனை பார்க்கும் வரை கதை சற்று மெதுவாக நகர்கிறது. பயணம் கதைக்குள் வந்த பிறகு கதை அடுத்த கட்டத்தை கொண்டு நகர்கிறது. சிவகார்த்திகேயன் வழக்கமான தனது எதார்த்தமான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் ஆக்சன் காட்சிகளில் கூடுதல் உழைப்பை கொடுத்துள்ளார். ரகுல் ப்ரீத்தி சிங்குக்கு படத்தில் பெரிய வேலை இல்லை என்றாலும், தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சரியாக நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயனுக்கு அடுத்து படத்தில் முக்கிய கதாபாத்திரம் என்றால் அது ஏலியன் தான். கிட்டத்தட்ட ஏலியனை சிஜியில் சரியாக வடிவமைத்துள்ளனர். மேலும் சீஜிதான் படத்தை தாங்கி நிற்கிறது. சிஜி 100% சரியாக இல்லை என்றாலும் 80% நம்பும் படியாக உள்ளது. ஏழினை அறிமுகப்படுத்தி கதைக்குள் செல்ல சிறிது நேரம் எடுத்துக் கொள்கிறது, இரண்டாம் பாதி சுவாரசியமாக தொடங்கினாலும் போகப்போக ஜவ்வாக இழுத்துள்ளனர். ஒரு சில இடங்களில் சொன்ன விஷயத்தை திரும்ப திரும்ப சொல்வதால் ஒருவித சலிப்பை தட்டுகிறது. வழக்கமாக ஹாலிவுட் படத்தில் சொல்லும் பூமியை காப்பாற்றும் கதை என்றாலும் தமிழ் மக்களுக்கு புரியும்படி திரைக்கதையை மாற்றி அமைத்துள்ளனர். ரகுமானின் இசையில் பாடல்கள் நன்றாக இருந்தாலும் அது கதைக்கு தேவைப்படவில்லை. மேலும் பின்னணி இசை எந்திரன் படத்தை அடிக்கடி ஞாபகப்படுத்துகிறது.
யோகி பாபு மற்றும் கருணாகரன் காமெடி ஒரு சில இடங்களில் நன்றாக ஒர்க் ஆகியுள்ளது. படம் தாமதம் இல்லாமல் வெளியாகியிருந்தால் இன்னும் நிறைய தாக்கத்தை ஏற்பட்டிருக்கும். அயலான் தொடங்கப்பட்டு வெளியாகும் இந்த ஏழு வருட காலகட்டத்தில் ஓடிடியின் வளர்ச்சி காரணமாக மக்கள் இது போன்ற நிறைய படங்களை பார்த்து விட்டதால் அயலான் எதிர்பார்த்த தாக்கத்தை கொடுக்கவில்லை. இருப்பினும் நிச்சயம் குழந்தைகளுக்கு இந்த படம் பிடித்து விடக்கூடும்.
மேலும் படிக்க | Dhanush Net worth: தலை சுற்ற வைக்கும் தனுஷின் சொத்து மதிப்பு! எத்தனை கோடி தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ