பிரம்மாஸ்திரம் படத்தின் அடுத்த இரண்டு பாகங்கள்..வெளியானது ரிலீஸ் தேதி
ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடித்த பிரம்மாஸ்திரம் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் குறித்த தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. அதன்படி இந்த படங்களின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப்பச்சன், நாகார்ஜுனா, ரன்பீர் கபூர், ஆலியா பட், மௌனி ராய் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான பிரம்மாஸ்திரம் திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்டமான முறையில் உருவாகப்பட்ட இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல அளவில் வரவேற்பை பெற்றது. சுமார் 410 கோடி பட்ஜெட்டில் 5 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட இந்த படத்திற்காக பத்து ஆண்டுகளாக உழைத்தேன் என இயக்குனர் அயன் முகர்ஜி படம் வெளியான போது தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் ஹிந்தியில் வெளியான இந்த படம் தமிழ் உள்பட பழமொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படம் 430 கோடி வரை வசூல் ஆனதாகவும் கூறப்பட்டது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் கிராபிக் காட்சிகள் கொண்ட இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.
மேலும் படிக்க | ஜீ தமிழ் 'சரி கம பா' டைட்டில் வின்னர் திடீர் மரணம்..ரசிகர்கள் அதிர்ச்சி
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பிரம்மாஸ்திரம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் மூன்றாம் பாகம் தயாரிக்கப்பட உள்ளது. இந்த படங்களின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2026 ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் மூன்றாம் பாகம் 2027 ஆம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் முதல் பாகத்தில் நடித்த ஆலியா, ரன்பீர் ஆகியோர் இரண்டாம் மூன்றாம் பாகங்களின் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக முதல் பாகத்தில் டிஜே ஷிவாவாக வரும் ரன்பீர் கபூர் இஷா எனும் ஆலியா பட்டை காதலிக்கிறார். அப்போது அவனுக்குள் இருக்கும் அந்த அக்னி சக்தி வெளிப்படுகிறது. அதன் பின்னர், தனக்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள நாயகன் எடுக்கும் முயற்சியும், தீய சக்திகளிடம் இருந்து தன்னையும் தனது காதலியையும் அந்த பிரம்மாஸ்திரத்தையும் எப்படி காப்பாற்றினார் என்பதே பிரம்மாஸ்திரம் படத்தின் முதல் பாகத்தின் கதையாகும். இதில் ரன்பீருக்கு பிரம்மாஸ்திரங்கள் பற்றி கூறுபவராக அமிதாப் பச்சன் நடித்திருந்தார். மேலும் குறைவான நேரமே வந்த ஷாருக்கான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். அத்துடன் காளை சக்தியுடன் நாகர்ஜுன் நடித்திருந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 4 மெகா ஹிட் சீரியலை நிறுத்தப் போகும் விஜய் டிவி..காரணம் இதுதானா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ