ஹாலிவுட் நிறுவனங்கள் , 135 கோடி மக்கள் தொகையை கணக்கில் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு பரிட்சயமான புராணங்களை சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் போன்று எடுக்க தீர்மானித்துள்ளன. அதில் முதல் வரவு பிரம்மாஸ்திரா. இந்த படத்தில் அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அயன் முகர்ஜி இயக்கி உள்ளார்.
கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷனுடன் ஹாலிவுட்டின் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது. வால்ட் டிஸ்னி படத்தை விநியோகம் செய்கிறது. இந்திய புராணங்கள் மற்றும் நவீன உலகம் என இரண்டும் கலந்த ஒரு காவியமாக பிரம்மாஸ்திரம் (Brahmastra), உருவாகியுள்ளது. பெரிய பட்ஜெட்டில் உருவான பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை உலகின் பல்வேறு பகுதிகளில் வெளியிடுவதற்காக இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைய உள்ளனர்.
ALSO READ | ரன்பீர் கபூரின் 'பிரம்மாஸ்த்ரா' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!
மூன்று பாகமாக வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிக்கின்றனர். அதன்படி தற்போது இந்த திரைப்படத்தில் தற்போது இயக்குநர் SS.ராஜமௌலி (SS Rajamouli) இணைந்ததுள்ளார்.
இந்த நிலையில் பிரம்மாஸ்திரம் படத்தின் தென்னிந்திய பதிப்பை இயக்குநர் SS ராஜமௌலி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியிடுகிறார். அதன்படி இன்று, SS.ராஜமௌலி, அயன் முகர்ஜியின் பிரம்மாண்டமான படைப்பான “பிரம்மாஸ்திரம்” படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளில் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ஒரு நாள் 09.09.2022 Brahmāstra Part One: Shiva வோட இருக்கப் போற இந்த நாளா நீங்க தவறவிடவே முடியாது#Brahmastra pic.twitter.com/SODLP20uHc
— BRAHMĀSTRA (@BrahmastraFilm) December 18, 2021
முன்னதாக கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி பிரம்மாஸ்திராவின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. 2022 செப்டம்பர் 9 படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | மிகவும் எதிர்பார்க்கப்பட்ட RRR படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR