பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான படம் 'பாகுபலி'. ராஜமெளலி இயக்கிய இப்படத்தை ஷோபு மற்றும் பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள். தமிழில் ஞானவேல்ராஜாவும், இந்தியில் கரண் ஜோஹரும் இப்படத்தை வெளியிட்டார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகளவில் சுமார் 600 கோடி ரூபாய் வசூல் செய்து இந்தியாவில் தயாரான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது. மேலும், இப்படத்தின் 2-ம் பாகம் எடுக்கப்பட்டு வந்தது. ஏற்கனவே இந்த திரைப்படம் ஏப்ரல் 28, 2017ல் வெளியாகும்" என அறிவித்திருந்தார்கள். 


'பாகுபலி 2' படத்துக்கு பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. தற்போது படத்தின் இயக்குனர் ராஜமெளலி 'பாகுபலி 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமுக வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.