“தளராத பற்றுறுதி மற்றும் கட்டுப்பாட்டை சித்தரிக்கும் கட்டப்பாவின் ஆன்மாவை நேர்த்தியாக வெளிப்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது” என்கிறார் பாகுபலி: க்ரௌன் ஆஃப் பிளட்” தொடருக்கான டப்பிங்கிற்கு தனது தயாரிப்பு குறித்து தமிழ் பின்னணி குரல் கலைஞர் மித்ரன்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுவரை கேள்விப்படாத, கண்டிராத மற்றும் நேரில் பார்த்திராத பல நிகழ்வுகளும், கதைகளும் பாகுபலியிலும் மற்றும் மகிழ்மதி உலகிலும் உள்ளன. டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் கிராஃபிக் இந்தியா நிறுவனம் ஆகியவை ஒருங்கிணைந்து இந்திய ரசிகர்களின் அபிமானமிக்க திரைப்பட ஃப்ராஞ்சைஸான ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்-ன் 'பாகுபலி: க்ரௌன் ஆஃப் பிளட்' என்ற அனிமேஷன் தொடரை சமீபத்தில் அறிமுகப்படுத்தின. 


பாகுபலியும் பல்லாலதேவாவும் கைகோர்த்து மாபெரும் சாம்ராஜ்யமான மகிஸ்மதியையும் அதன் சிம்மாசனத்தையும் அதன் மிகப்பெரிய அச்சுறுத்தலான, பயங்கரமான கொடுங்கோலனான ரக்ததேவனிடமிருந்து பாதுகாப்பை சித்தரிக்கும் அற்புதமான கதை இது.


கிராஃபிக் இந்தியா மற்றும் ஆர்கா மீடியாவொர்க்ஸ் தயாரிப்பான பாகுபலி: கிரௌன் ஆஃப் பிளட், தொலைநோக்குப் படைப்பாளியான பிரபல இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி, ஷரத் தேவராஜன், ஷோபு யார்லகட்டா ஆகியோரால் தயாரிக்கப்படுகிறது. ஜீவன் ஜே. காங், நவின் ஜான் ஆகியோரின் இயக்கத்தில் இது வெளிவருகிறது.


உலகெங்கிலும் இரசிகர்களால் சில கதாப்பாத்திரங்கள் மிகப்பெரிய அளவில் நேசிக்கப்படுகின்றன மற்றும் கற்பனை செய்ய இயலாத அளவிற்கு மிக பிரபலமாக திகழ்கின்றன. இத்தகைய கதாப்பாத்திரங்களுக்கு பின்னணி குரல் கொடுக்கும் போது அது அச்சு அசலாக ஒரிஜினல் நடிகரின் குரல் போலவே இருப்பதை உறுதி செய்வது மிக முக்கியமானது. பாகுபலி-க்ரௌன் ஆஃப் பிளட் என்ற இந்த சீரிஸின் தமிழ் பதிப்பில் கட்டப்பாவிற்கு பின்னணி குரல் கொடுக்கும் பின்னணி குரல் கலைஞர் திரு. மித்ரன், கட்டப்பா என்ற வலுவான கதாப்பாத்திரத்திற்கு பின்னணி குரல் தருவதற்கான அவரது தயாரிப்புகள் குறித்து இங்கு பகிர்ந்து கொள்கிறார்.


மேலும் படிக்க | Ethirneechal 2 : விரைவில் வருகிறதா எதிர்நீச்சல் 2? நாயகி கொடுத்த அப்டேட்..


இது குறித்து விரிவாக பேசிய தமிழ் பின்னணி குரல் கலைஞர் திரு. மித்ரன் கூறியதாவது: “கட்டப்பாவின் நடத்தை மற்றும் தனிப்பழக்கங்களை குரலின் மூலம் பிரதிபலிப்பது மீது நான் சிறப்பு கவனம் செலுத்தினேன். நுட்பமான சைகைகள் மற்றும் குரல் தகுதியின் வழியாக அவரது மனஉறுதியையும், அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதே எனது நோக்கமாக இருந்தது.


இந்த கதையின் கலாச்சாரம் மற்றும் வரலாற்று ரீதியான சூழலை சரியாக புரிந்து கொள்வதற்காக விரிவான ஆராய்ச்சியில் நான் இறங்கினேன். அதன் மூலம் கட்டப்பாவின் கதாப்பாத்திரத்தை எனது குரல் மூலம் சித்தரிப்பதில் உண்மைத்தனம் வெளிப்படுவதை உறுதி செய்வது  மீது நான் கவனம்  செலுத்தினேன். இந்த விரிவான தயாரிப்பு நடவடிக்கை வழியாக திரையில் நம்பகத்தன்மையோடு கட்டப்பாவின் கட்டுப்பாட்டையும், விஸ்வாசத்தையும் சரியாக சித்தரிப்பது எனது நோக்கமாக இருந்தது.”


மேலும் படிக்க | விடாமுயற்சி படம் தள்ளிப்போக காரணம் என்ன? அஜித்தால் கடுப்பான ரசிகர்கள்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ