Ethirneechal 2 Update : தமிழ் ரசிகர்களை அதிகம் ஈர்த்த டெலிவிஷன் தொடர்களுள் ஒன்று, எதிர்நீச்சல். இதில், நாயகியாக நடித்திருந்த மதுமிதா, இந்த தொடர் குறித்த அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார்.
Ethirneechal 2 Update : டெலிவிஷன் நிகழ்ச்சிகளுக்கும், தொடர்களுக்கும் சினிமாவிற்கு இருப்பது போல பல லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர். மாமியார்-மருமகள் சண்டை, காதல் கதைகள் என்று மட்டும் இருந்த சீரியல் கதைகள், தற்போது பல்வேறு பரிமானங்களை பெற்றிருக்கிறது. அப்படி, வித்தியாசமான கதையம்சம் கொண்ட தொடர்களுள் ஒன்று எதிர்நீச்சல். இந்த தொடரில் பெண்களின் சுதந்திரம் பற்றியும், அவர்களுக்கு சமூகத்தில் இருக்கும் அழுத்தம் குறித்தும் பேசப்பட்டிருக்கும். இந்த தொடரை பலர் விரும்பி பார்த்து வந்த நிலையில், சமீபத்தில் இதற்கு எண்ட் கார்டு போடப்பட்டது. இந்த நிலையில், இத்தொடரின் இரண்டாவது பாகம் வர இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக ஆதரவை பெற்ற டெலிவிஷன் தொடர்களுள் ஒன்று எதிர்நீச்சல். இதனை திருச்செல்வம் இயக்கியிருந்தார்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடரில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து பேசப்பட்டது.
பிற்போக்காக யோசிப்பவர்கள் இருக்கும் குடும்பத்தில் மருமகளாக நுழையும் ஜனனி, அங்கு ஏற்படுத்தும் மாற்றங்கள்தான் எதிர்நீச்சல் தொடரின் கதை. இதில், ஆதி குணசேகரன் எனும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்த மாரிமுத்து, மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு பதிலாக வேல ராமமூர்த்தி இந்த தொடரில் நடிக்க ஆரம்பித்தார்.
இதில், ஜனனி கதாப்பாத்திரத்தில் மதுமிதா நடிக்க, அவருடன் கனிகா, ஹரிபிரியா, விபு ராமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த தொடர் சமீபத்தில் முடிவுக்கு வந்தது.
நாளின் இறுதியி களைத்துப்போய் வீட்டிற்கு வருவோருக்கு ஒரே ஒரு ஆதரவாக இருந்தது இந்த தொடர்தான். ஆனால், இத்தொடர் சமீபத்தில் முடிவுக்கு வந்ததால் ரசிகர்கள் சோகமாக மாறினர்.
வெற்றிகரமாக சென்ற தொடர்கள், இரண்டாம் பாகம் மூலம் கம்-பேக் கொடுப்பது சகஜம் ஆகி விட்டது. அந்த வகையில், எதிர்நீச்சல் தொடரின் இரண்டாம் பாகத்தை எடுப்பார்களா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
எதிர்நீச்சல் தொடரின் நாயகி மதுமிதா சமீபத்தில் இன்ஸ்டாவில் “கேள்வி-பதில்” ஸ்டோரியை வைத்திருந்தார். அதில் அவர் எதிர்நீச்சல் 2 குறித்து கூறியிருக்கிறார்.
ஒரு ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், இன்னும் எதிர்நீச்சல் 2 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.