வன்னியரசு போட்ட ஒற்றை ட்வீட்: மீரா மிதுனை போல கைதாவாரா பயில்வான்?
இவர் மீது பாடகி சின்மயி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு தனது ட்விட்டர் பக்கத்தில் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் குறித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து பயில்வான் ரங்கநாதன் மீது வழக்குப்பாயுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் படிக்க | வலிமை ஓடிடி வெளியீட்டுக்கு தடை இல்லை: நிவாரணம் அளித்த சென்னை உயர் நீதிமன்றம்
நடிகரும், சினிமா விமர்சகரும் ஆன பயில்வான் ரங்கநாதன் பல்வேறு யூடியூப் சேனல்களில் சினிமா நட்சத்திரங்கள் குறித்து அவதூறாக பேசி வருகிறார். கிட்டதட்ட 10-க்கும் மேற்பட்ட சேனல்களில் பேசும் இவர், நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். எப்படி நடிகர்களுக்கு விவாகரத்து ஆனது என்பது குறித்தும், நடிகைகளுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்தும் சர்ச்சையாக பேசுவார்.
இவரின் வீடியோக்கள் பல லட்சம் வியூஸ் அள்ளும் என்பதால், பல யூடியூப் சேனல்கள் சப்ஸ்கிரைபர்களை ஏற்ற இவரைத் தான் பயன்படுத்துவார்கள். இது ஒருபக்கம் இருக்க, பயில்வான் ரங்கநாதன் மீது பாடகி சின்மயி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்று மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில் மீ டு புகார் அளிக்கும் நடிகைகள் குறித்து கொச்சையாக பேசி இருப்பார். இந்த வீடியோவை இணைத்து வன்னியரசு ட்வீட் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “பெண்ணின் மானத்துக்கு பங்கம் விளைவிக்கும் உட்கருத்து கொள்ளப்பட்ட சொல் அல்லது சைகை,செய்கை போன்ற செயல்களுக்கு சட்டம் 509ன் கீழ் கைது செய்து,ஓராண்டு அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கலாம். பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்தும் இவனை குண்டர் சட்டத்தில் தளைப்படுத்தவேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | நாக சைதன்யாவுக்காக சமந்தா கொடுத்த இன்ஸ்டா மெசேஜ்? இதை வேறு செய்துள்ளாரா?
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை மீராமிதுனுக்கு எதிராக வன்னியரசு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த வழக்கில் கைதான மீராமிதுன் ஜாமீனில் வெளியே வந்தார். தற்போது அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால், அவரை கைது செய்து ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது பயில்வான் ரங்கநாதன் மீது வன்னியரசு ட்விட்டரில் புகார் எழுப்பியுள்ள நிலையில், இது புகாரானால் அவர் கைதாக வாய்ப்புள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR