நாக சைதன்யாவுக்காக சமந்தா கொடுத்த இன்ஸ்டா மெசேஜ்? இதை வேறு செய்துள்ளாரா?

சமந்தா தனது முன்னாள் கணவரை பின்தொடர்வதை நிறுத்தினாலும், நாக சைதன்யா இன்னும் சமந்தாவை பின்தொடர்ந்து வருகிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 23, 2022, 05:33 PM IST
  • விவாகரத்துக்குப் பிறகு சமந்தா பிஸியாக நடித்து வருகிறார்
  • மனஉளைச்சலில் இருந்து மீண்டதாக அவர் தெரிவித்திருந்தார்
  • திருமண உடையை அவர் திருப்பி அளித்திருந்தார்
நாக சைதன்யாவுக்காக சமந்தா கொடுத்த இன்ஸ்டா மெசேஜ்? இதை வேறு செய்துள்ளாரா? title=

நாக சைதன்யாவை பிரிந்த பின் சமந்தா படு பிஸியாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது இவர்கள் குறித்த கிசுகிசுக்கள் உலா வந்தாலும், அதை எல்லாம் இருவரும் கண்டுகொள்வதில்லை. இந்நிலையில் தனது கணவரை இன்ஸ்டாவில் பின் தொடர்வதை நிறுத்தியுள்ளார் சமந்தா. அதோடு அவர் இன்ஸ்டாவில் ஸ்டோரி ஒன்றையும் வைத்துள்ளார். இந்த இரண்டையும் இணைத்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | 'விஜய்' படத்தைத் தட்டித் தூக்கிய அனிருத்! - #Exclusive!

கடந்த ஆண்டு தனது 4 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டார் சமந்தா. தனது காதல் கணவரை பிரிந்த பிறகு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர், தற்போது இயல்பாகி படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார். நாக சைதன்யாவும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தனது திருமண உடையை முன்னாள் கணவர் நாகசைதன்யா வீட்டில் சமந்தா ஒப்படைத்ததாக செய்திகள் வெளியாகின.

Naga Chaitanya Instagram

சமந்தா நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் விரைவில் வெளியாக உள்ளது. அதோடு சமந்தா கதையின் நாயகியாக நடிக்கும் யஷோதா படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இத்தனை வேலைகளுக்கு நடுவே விவகாரத்துக்கு பின்னும் நாக சைதன்யாவை இன்ஸ்டாவில் பின் தொடர்ந்து வந்த சமந்தா தற்போது அவரை பின் தொடர்வதை நிறுத்தியுள்ளார். 

Screen Shot

அதோடு தனது ஸ்டோரியில், “சில சமயங்களில் உள்ளே இருக்கும் பலம் அனைவரும் பார்க்கக்கூடிய நெருப்புச் சுடராக இருக்காது. சில நேரங்களில், இது ஒரு சிறிய தீப்பொறியாக மென்மையாக உங்களிடம் சொல்லும். நீங்கள் உங்கள் பாதையை தொடருங்கள், உங்களுக்கு புரிந்ததா” என்று எழுதியுள்ளார். 

மேலும் படிக்க | விஜய்யின் ‘பீஸ்ட்’டில் கை வைத்த உதயநிதி! - என்ன ஆச்சாம்?!

சமந்தா - நாக சைதன்யா ரசிகர்கள் அவர்கள் எப்படியாவது ஒன்று சேர வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், சமந்தாவின் இந்த அதிரடி அவர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. சமந்தாவின் பதிவுக்கு பலரும் நீங்கள் விரைவில் ஒன்று சேர வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News