சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்ற செய்தி சில தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அறிவிக்கப்பட்ட பீஸ்ட் படத்தில் நடிப்பவர்களின் பட்டியலில் இயக்குனர் செல்வராகவன் இணைந்திருந்தார். மேலும் யோகிபாபு, விடிவி கணேஷ், லில்லிபுட்பருக், சைதாம்டாகோ, அபர்ணா தாஸ், அன்கூர் ஆஜித்விகல் போன்றோரும் இணைந்து இருந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செல்வராகவன் இப்படத்தில் (Beast) முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதால் அவரது சகோதரரான தனுஷூம் இப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி பரவ ஆரம்பித்தது. இது முழுக்க தவறான தகவல் என்று படக்குழுவில் உள்ள நபர்களிடமிருந்து தகவல்கள் வந்துள்ளது. மாஸ்டர் படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதியது போல், தனுஷ் (Dhanush) அவர்களும் ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் எழுத கூடுமே தவிர படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறினர். அனிருத் இசையில் தனுஷ் பாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறினர். 


ALSO READ | Master Film Remake: இந்தியில் விஜய் வேடத்தில் நடிக்கப்போவது இந்த சூப்பர் ஹீரோதான்


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் அடுத்ததாக நடிக்க இருக்கிறார்.  இந்த படத்திற்கு திருச்சிற்றம்பலம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ்-அனிருத் கூட்டணி இப்படத்தில் இணைகிறது. பீஸ்ட் படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் என்பதால் இதன் காரணமாகவும் இவ்வாறான செய்தி வந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. மேலும் தனுஷின் கைவசம் நிறைய படங்கள் உள்ளதால் புதிய படங்களில் தற்போது நடிக்க மாட்டார் என்று தனுஷ் தரப்பில் இருந்து தகவல்கள் வருகின்றன. 


வழக்கமாக நெல்சன் இயக்கும் படங்களில் சிவகார்த்திகேயன் பாடல் எழுதி வருவதால் பீஸ்ட் படத்திலும் ஒரு பாடல் எழுதி பாடியிருப்பார் என்று கூறப்படுகிறது.


ALSO READ | Thalapathy Vijay: விஜய் பிறந்தநாள் சிறப்பு வாட்ஸ்அப் ஸ்டேடஸை வெளியிட்டார் தாணு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR