Thalapathy Vijay Birthday: விஜய் பிறந்தநாள் சிறப்பு வாட்ஸ்அப் ஸ்டேடஸை வெளியிட்டார் தாணு

நடிகர் விஜயின் பிறந்தநாள் நாளை, ஜுன் 22. இந்த நாளை உற்சாகமாக கொண்டாட தளபதி விஜயின் ரசிகர் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 21, 2021, 09:07 AM IST
  • நடிகர் விஜயின் பிறந்தநாள் நாளை, ஜுன் 22
  • விஜயின் பிறந்தநாள் ஹேஷ்டேக் சமூக ஊடங்களில் ட்ரெண்ட்
  • பிறந்த நாளுக்கு என்று சிறப்பு Whatsapp Status டி.பி வெளியிடப்பட்டது
Thalapathy Vijay Birthday: விஜய் பிறந்தநாள் சிறப்பு வாட்ஸ்அப் ஸ்டேடஸை வெளியிட்டார் தாணு title=

நடிகர் விஜயின் பிறந்தநாள் நாளை, ஜுன் 22. இந்த நாளை உற்சாகமாக கொண்டாட தளபதி விஜயின் ரசிகர் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ரசிகர்கள் மட்டுமல்ல, திரைத்துறை சார்ந்த பலரும் விஜயின் பிறந்தநாளுக்கு சில நாட்களுக்கு முன்னரே அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர்.
 
நடிகர் விஜய்க்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் உண்டு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிய ரசிகர் படையைக் கொண்டவர் விஜய். வழக்கம்ப்போல், இந்த கொரோனா காலத்திலும் போது நலத்திட்ட உதவி, உணவு வழங்குதல் என பல்வேறு சமூக பணிகளும் தொடரும் என்று கூறப்படுகிறது. தற்போது சமூக ஊடங்களில் அவரது பிறந்தநாள் ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகிறது.

Also Read | Master Film Remake: இந்தியில் விஜய் வேடத்தில் நடிக்கப்போவது இந்த சூப்பர் ஹீரோதான்

அதுமட்டுமல்ல, அவரது பிறந்த நாளுக்கு என்று சிறப்பு டி.பியும் வெளியிடப்பட்டுள்ளது. அதை திரைப்பட தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார்.

நாடு தழுவி தளபதியாக கொண்டாடப்படும் தம்பி விஜய் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், Special "Whatsapp Status" யை அவர் ரசிகர்களுக்காக வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். 

அதைத் தவிர, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு டிவிட்டர் செய்தி ஒன்றையும் வெளியிட்டார். அதில், 'உங்கள் பிறந்தநாள், திரையுலகின் திருநாள், உலகத் தமிழருக்கு பெருநாள், வாழ்க வளமுடன், வாழ்த்தும் வி கிரியேஷன்ஸ்' எனக் குறிப்பிட்டுள்ளார். போஸ்டரில் 'ஐகான் ஆஃப் மில்லியன்ஸ்’ (Icon of Millions') எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் தற்போது தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். அவரது பிறந்த நாள் அன்று தளபதி 65 குறித்த அப்டேட் வெளியாகும்.

Also Read | #Thalapathy65 ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் பற்றிய மாஸ் அப்டேட்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News