ஆஷிக் அபு இயக்கத்தில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி திரையரங்கில் வெளியான மலையாள மொழி திரைப்படம் 'நாரதன்'.  இதில் டோவினோ தாமஸ் பிரபல தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளராக சந்திரசேகர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.   பத்திரிக்கையாளர் அவரது திறமையை உணர்த்த முயற்சி செய்வதே இப்படத்தின் கதையாகும்.  இதில் அன்னா பென், ஷராபுதீன் மற்றும் விஜயராகவன் அஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் ஏப்ரல்-7ம் தேதி வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | விஜய், அஜித்தை முந்தும் தனுஷ்! - ஆச்சர்யத்தில் கோலிவுட்!


வியாஸக் இயக்கத்தில் ரோஷன் மேத்யூ மற்றும் அன்னா பென் ஆகியோரது நடிப்பில் கடந்த மார்ச்-11ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'நைட் ட்ரைவ்'.  இதில் ரோஷன் உபெர் டிரைவராக ஜார்ஜ் கதாபாத்திரத்திலும், அன்னா பென் ரியா என்கிற கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்துள்ளனர்.  ஒருவர் மேல் ஒருவர் பிரியம் கொண்ட இருவரும் மாலை பொழுதில் பயணம் செய்யும்போது ஏற்படும் எதிர்பாராத விபத்தில் சிக்கி பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.  இந்த படத்தில் இந்திரஜித், சித்திக், கலாபவோன் ஷாஜோன் மற்றும் ரெஞ்சி பணிக்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படம் ஏப்ரல் 10 முதல் மனோரமா மேக்ஸில் வெளியாகியுள்ளது.



அடுத்ததாக தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு போலீசாக நடித்துள்ள படம் 'டாணாக்காரன்'.  போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவைக் கொண்ட அவர், போலீஸ் அகாடமியில் சேர்க்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறார், பின்னர் பயிற்சி முகாமில் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் அங்கு நடக்கும் அவலங்கள் போன்றவற்றை கதைக்களமாக இப்படம் கொண்டுள்ளது.  இப்படம் ஏப்ரல் 8 முதல் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.  



பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்திருந்த படம் 'எதற்கும் துணிந்தவன்'.   காதல் என்கிற பெயரில் பெண்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்களை தவறான வழிக்கு கொண்டு செல்வதை எதிர்த்தும் போராடும் கதாநாயகன் வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களை இப்படம் கதைக்களமாக கொண்டுள்ளது.  இப்படம் நெட்ப்ளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் இயங்குதளத்தில் வெளியாகுகிறது.



ரிதேஷ் ஷா இயக்கத்தில் அபிஷேக் பச்சன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தஸ்வி'.  ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்ட முதல்வர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத முடிவு செய்வதை கதைக்களமாக இப்படம் கொண்டுள்ளது.  இந்த படத்தில் யாமி கௌதம், நிம்ரத் கவுர், மனு ரிஷி, ரோஹித் திவாரி ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த படம் ஏப்ரல் 7 முதல் நெட்ப்ளிக்ஸ் இயங்குதளத்தில் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | பீஸ்ட்'டுக்கு முன்பாக திடீரென வெளியான KGF:  ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR