’நான் பிஜேபி இல்லை’பாக்யராஜ் விளக்கம் - வீடியோ
தான் பேசிய குறைப்பிரசவம் என்ற கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாக இயக்குநர் பாக்யராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்
சென்னை கமலாலயத்தில் ‘பாரத பிரதமரின் மக்கள் நலத் திட்டங்கள் புதிய இந்தியா - 2022’ என்ற புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டதில் திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் கலந்து கொண்டார். அண்ணாலை புத்தகம் வெளியிட பாக்யராஜ் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் ஆகியோர் இந்தப் புத்தகத்தப் பெற்றுக் கொண்டனர்.
மேலும் படிக்க | அப்பாக்களை வெச்சு செய்யும் மகன்கள் - இளையராஜா முதல் பாக்யராஜ் வரை
நூலைப் பெற்றுக்கொண்ட பின்னர் உரையாற்றிய பாக்யராஜ் பேசிய கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. மேடையில் பேசும்போது மோடிக்கு டிப்ஸ் ஒன்று சொல்வதாக தெரிவித்த அவர், விமர்சிப்பவர்கள் குறைமாதத்தில் பிறந்தவர்கள் என தெரிவித்தார். குறைமாசத்தில் பிறந்தவர்கள் அவர்களும் பேசமாட்டார்கள், மற்றவர்கள் சொன்னாலும் காது கொடுத்து கேட்க மாட்டார்கள் என விமர்சனம் செய்தார். அவரின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்தப் பேச்சுக்கு விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இயக்குநர் பாக்யராஜ், மாற்றுத் திறனாளிகளை குறிப்பிட்டு தான் பேசவில்லை எனத் தெரிவித்தார்.
யாரையும் புன்படுத்தும்நோக்கில் தான் பேசவில்லை எனக் கூறியுள்ள பாக்யராஜ், நான் பிஜேபியை சேர்ந்தவரில்லை எனத் தெரிவித்துள்ளார். தமிழ் மொழி மற்றும் திராவிட கருத்துகளை உள்வாங்கியே வளர்த்திருப்பதாகவும், அதன் வெளிப்பாடாக தன் படங்களில் காட்சிகளை அமைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எப்போதும் பெரியார், அண்ணா, கலைஞர், ஜீவா, எம்ஜிஆர் ஆகியோரின் கருத்துகளுடனேயே இருப்பேன் என்றும் அவர் தன்னுடைய விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | மலர் டீச்சர் பார்க்க ஆசையா? ஏப்ரல் 22 ஆம் தேதி ரெடியாகுங்க
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR