தாலியுடன் ஷாக் கொடுத்த பரணி! அண்ணா சீரியலில் சௌந்தர பாண்டி வைத்த செக்மேட்
சண்முகத்துக்கு சௌந்தர பாண்டி வைத்த செக்மேட்.. தாலியுடன் ஷாக் கொடுத்த பரணி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாக்கியம் உனக்கு கல்யாணம் என்பது எனக்கு தெரியும் என பரணிக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
பாக்கியம் சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியான பரணி உனக்கு எப்படிமா தெரியும் என்று கேட்க நான் உன்னுடைய அம்மாடி என்று சொல்கிறார். மேலும் பரணிக்கு ஒரு தாலியையும் ஒரு பாத்திரத்தையும் எடுத்துக் கொடுத்து இது அம்மா வீட்டு சீதனம், இந்த தாலியை கட்டிக்கிட்டு என்னுடைய வாழ்க்கையை சந்தோஷமா உன் வாழ்க்கையை ஆரம்பித்து வாழு என்று சொல்கிறான்.
பரணி கல்யாணம் முடிந்ததும் நான் நேராக இங்க தான் வருவேன் என சொல்ல, பாக்கியம் நீ இங்க வர வேண்டாம், கண் காணாத இடத்துக்கு போய் உன்னுடைய வாழ்க்கையை வாழு என சொல்கிறார்.
ஆனால் பரணி நான் இங்கு வராம போயிட்டால், இதுல உனக்கும் பங்கு இருக்குன்னு அப்பா உன்னை சும்மா விட மாட்டாரு. ஆகையால் நான் இங்க வந்துட்டு தான் போவேன் என்று சொல்கிறார். அதன் பிறகு பரணி கல்யாணத்துக்கு கிளம்ப சௌந்தரபாண்டி என்ன கிளம்பியாச்சா உன்னோட என்னுடைய ஆள் ஒருத்தன் வருவான் என சொல்ல பரணியும் பாக்கியமும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இப்படி அதிர்சியும், ஆனந்தமுமாக மாறி மாறி வரும் அண்ணா தொலைகாட்சி சீரியலில், சண்முகம் வருவதைப் பார்த்த பரணியும் பாக்கியமும் நிம்மதி அடைகின்றனர். அப்படியே ப்ளாஸ் கட்டில் சண்முகத்தை வீட்டுக்கு அழைக்கும் சௌந்தரபாண்டி பரணியோட நடவடிக்கை சரியில்லை இப்ப வேற ஏதோ கல்யாணத்துக்கு போக போறதா வெளியூருக்கு போறா, அவளோட நீயும் போ அங்க ஏதாவது தப்பா நடக்கிற மாதிரி இருந்தா எனக்கு உடனே தகவல் கொடுக்கணும் என்று சொல்கிறார்.
பரணியோட கல்யாணமும் உன் தங்கச்சியோட கல்யாணமும் ஒரே மனமேடையில் தான் நடக்க போகுது ஆகையால் பரணி கல்யாணம் நின்னா, உன் தங்கச்சி கல்யாணமும் நின்று போயிடும் என சண்முகத்துக்கு செக் வைக்கிறார்.
பிறகு பரணி மற்றும் சண்முகம் கிளம்பிச் செல்ல, கார் ரிப்பேர் ஆகி நிற்க ஜீப்பில் லிப்ட் கேட்டு ஏறுகின்றனர். பரணி இந்த ஜீப்பை வேகமாக ஓட்டி பிரேக் அடிக்கும் போது அவளிடம் இருந்த தாலி தவறி கீழே விழ இதை பார்த்து இவகிட்ட எதுக்கு தாலி இருக்கு என ஷண்முகமும் வெட்டுக்கிளியும் பதற்றம் அடைகின்றனர்.
பிறகு கல்யாண மண்டபத்துக்கு வந்து இறங்க மாப்பிள்ளை வீட்டார் வர அவர்களை டான்ஸ் ஆடி வரவேற்க வேண்டும் என பரணி, சண்முகம் இந்த பக்கம் டான்ஸ் ஆடி வர மறுபக்கம் மாப்பிள்ளை வீட்டார் உடன் நான்கு தங்கைகளும் டான்ஸ் ஆடிக்கொண்டு வருகின்றனர். சண்முகத்தை பார்த்து தங்கைகளும் தங்கைகளை பார்த்து சண்முகமும் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்
மேலும் படிக்க | அண்ணா சீரியல் அப்டேட்: அசிங்கப்பட்ட ஷண்முகம்.. என்ட்ரி கொடுக்கும் முத்துப்பாண்டி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ