'துர்காமதி' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பபட்டது. அனுஷ்கா ஷெட்டியின் (Anushka Shetty) நடிப்பில் வெளியாகி அனைவரையும் கவர்ந்த பாகமதி திரைப்படத்தின் ரீமேக்கான துர்காமதி இந்தி திரைப்படத்தில் பூமி பெட்னேகர் (Bhumi Pednekar) குற்றவாளியாக நடிக்கிறார். மஹி கில் (Mahie Gill) ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டுக்காக நல்லது செய்யும் அமைச்சர் ஒருவரை கடவுளர் சிலைகள் கடத்தல் வழக்கில் சிக்க வைக்கத் திட்டமிடப்படுகிறது. அமைச்சரின் தனிச் செயலாளராக பணிபுரியும் ஐ.ஏ.எஸ் அதிகாரி அனுஷ்காவை பாகமதி என்ற பேய் வசிக்கும் வீட்டில் சிறையிலடைத்து விசாரணை நடத்துகின்றனர்.  அரசியல் சதுரங்க விளையாட்டில் அனுஷ்கா என்ன செய்தார் என்பதே பாகமதி திரைக்கதையின் சுருக்கம்.  இந்த திரைப்படத்தில் அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பு அனைவரையும் அசரவைத்தது.


இப்படி மிகவும் பரவலாக பாராட்டுகளை பெற்ற பாகமதியின் ரீமேக்கில் அனுஷ்காவின் வேடத்தை ஏற்று நடிக்கிறார் பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர்.  'துர்காமதி' படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. டிரெய்லரில் பூமி பெட்னேகருடன் அர்ஷத் வார்சியும் (Arshad Warsi) தோன்றுகிறார்.



படத்தின் டிரெய்லர் கலக்கலாக பாகமதியைப் போலவே எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. பூமி பெட்னேகரின் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை துர்காமதி வெளிக் கொணரும் என்ற எதிர்ப்பார்ப்புகள் ஏற்கனவே அனைவரிடமும் வந்துவிட்டது. இந்தப் திரைப்படத்தில் Bhumi Pednekar-இன் பெயர் சஞ்சல் சவுகான்.


மஹி கில் (Mahie Gill) போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பதை டிரெய்லரில் பார்க்க முடிகிறது. துர்காமதி (Durgamati) திரைப்பட ட்ரெய்லரை பூமி பெட்னேகர் தனது சமூக ஊடக கணக்கில் பகிர்ந்துள்ளார். 



பூமி பெட்னேகர் கடுமையாக உழைத்தார்
பூமி பெட்னேகர், துர்கமதி டிரெய்லரைப் பகிரும்போது, 'இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நான் நீண்ட நேரம் காத்திருந்தேன். இது ரத்தம் மற்றும் வியர்வை சிந்தி நடித்த திரைப்படம். இது மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் ஒன்றாகும். என் மீது நம்பிக்கை வைத்த அக்‌ஷய் குமார், பூஷன் குமார், இயக்குனர் அசோக், விக்ரம் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தின் தனது சக நடிகர்களான அர்ஷத் வார்சி, மஹி கில், கரண் கபாடியா மற்றும் ஜிசு யு சென்குப்தா ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ள பூமி பெட்னேகர், துர்காமதி குறித்து உற்சாகமாக உள்ளார்.



தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையானசெய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR