சிம்புவுக்கு ஜோடியாகும் இந்த பெரிய டைரக்டரின் மகள்
சிம்புவின் கொரோனா குமார் படத்தில் பிரபல இயக்குனரின் மகள் நாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சிம்பு நடிப்பில் மாநாடு வெற்றியடைந்ததையொட்டி கெளதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தினையும் விரைவில் திரைக்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளது படக்குழு. இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
இந்த நிலையில் தற்போது இயக்குனர் கோகுல் அடுத்ததாக கொரோனா குமார் (Corona Kumar) என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தை சிம்பு (Actor Simbu) நாயகனாக நடிக்க, வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் இருந்து சிஎஸ்கே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
ALSO READ | 'வெந்து தணிந்தது காடு' படத்தின் டீசர் வெளியீடு!
இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகளை நடிக்க ரெடியாக இருந்த போதிலும் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஷங்கரை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. இந்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிதி ஷங்கர் ஏற்கனவே கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் விருமன் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து மற்றொரு முன்னணி நடிகரான சிம்புவின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
‘ரெளத்திரம்’, ‘காஷ்மோரா’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘அன்பிற்கினியாள்’ படங்களை இயக்கியவர் கோகுல் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | ’சிம்பு, வெங்கட்பிரபு அட்ரஸ் வேனுமா?’ பிரேம்ஜி டிவிட், எஸ்.ஜே.சூர்யா ரியாக்ஷன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR