நயன்தாராவுடன் திருமணம்; விக்னேஷ் சிவனின் ஷாக் பதில்
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை 6 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் ஹாட் ஜோடி என்றால் அது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தான். சிம்புவின் போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார்.
நயன்தாரா (Nayanthara) மற்றும் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) தங்களின் காதலை வெளிப்படுத்தும் விதமாக தொடர்ந்து இணையத்தில் ஃபோட்டோக்களை வெளியிட்டு, பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி பல ஹிட் படங்களை தயாரித்து வருகின்றனர்.
ALSO READ | Kaathu Vaakula Rendu Kaadhal: காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் அப்டேட் ரெடி
இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள், நயன்தாரா குறித்து ஏராளமான கேள்விகளை எழுப்பப்பட்டது. அவை அனைத்திற்கும் விக்னேஷ் சிவன் பதிலளித்தார். அப்படி சமீபத்தில் ரசிகர் ஒருவர், நயன்தாரா மேடமை ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.
அதற்கு பதில் அளித்த விக்னேஷ் சிவன், கல்யாணம், மத்ததுக்கு எல்லாம் ரொம்ப செலவாகும் ப்ரோ, அதனால் திருமண பணத்தை மிச்சம் பண்ணவும், கொரோனா போவதற்காகவும் தான் காத்திருக்கிறேன் என்றார். அத்துடன் ரசிகர்கள் பார்க்க ஆசைப்பட்டு கேட்டுக் கொண்டதால், நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட சில அன்சீன் ஃபோட்டோக்களையும் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ALSO READ | Insta viral: விக்னேஷ் சிவன் பகிர்ந்த நயன்தாராவுடனான சூப்பர் புகைப்படம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR