Insta viral: விக்னேஷ் சிவன் பகிர்ந்த நயன்தாராவுடனான சூப்பர் புகைப்படம்

நயன்தாராவுடன் நீங்கள் எடுத்துக்கொண்ட நெருக்கமான, ரகசிய புகைப்படத்தை பகிர்வீர்களா என்ற ரசிகர் ஒருவரின் விருப்பத்திற்கு ஏற்ப  இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா உடன் தான் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 28, 2021, 12:56 PM IST
Insta viral: விக்னேஷ் சிவன் பகிர்ந்த நயன்தாராவுடனான சூப்பர் புகைப்படம் title=

பிரபல இயக்குந்ர் விக்னேஷ் சிவனும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வைரலாகிறது. ரவுடி பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர்.  

தற்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் பர்வலாக பேசப்படுகிறது. இந்த திரைப்படத்தின் ஒரு சிங்கிள் பாடல் வெளியானது. மற்றொன்று ஜூலை மாதம் வெளியாகும் என்று முன்பே விக்னேஷ் சிவன் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில்தான் விக்னேஷ் சிவன் பகிர்ந்திருக்கும் இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.

திரையுலக பிரபலங்களான இருவரும் காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று, தனது இன்ஸ்டாகிராம் சமூக ஊடக பக்கத்தில் கேள்வி நேரம் என்று ஒரு சிறப்பு அமர்வை நடத்தினார் இயக்குநர் விக்னேஷ் சிவன். 

இந்த சிறப்பு நிகழ்ச்சியில் பலர் விக்னேஷ் சிவனிடம் கேள்விகளை கேட்டனர்.  ரசிகர்களுக்கு விக்னேஷ் சிவன் கூறியிருக்கும் பதில்கள் மட்டுமல்ல, அவர்களின் விருப்பப்படி நயனுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் சிவன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.  

எந்த உடை அணிந்தால் பிடிக்கும் என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு, பதிலளித்த விக்னேஷ் சிவன், நயனை புடவையில் பார்ப்பதற்கு பிடிக்கும் என்று பதிலளித்துள்ளார். இப்படி பல கேள்விகளுக்கு பதிலளித்த விக்னேஷ், தனக்கு பிடித்த திரைப்படம் விஜய் நடித்த கில்லி என்றும் நடிகை சமந்தா மனிதநேயம் மிக்கவர் என்றும் குறிப்பிட்டுள்ளார் நயன்தாரா.

நயன்தாராவுடன் நீங்கள் எடுத்துக்கொண்ட நெருக்கமான, ரகசிய புகைப்படத்தை பகிர்வீர்களா என்று ரசிகர் ஒருவர் சவால் விட்டார். ஏன் முடியாது என்று பதில் கேள்வி எழுப்பி,  நயன்தாரா உடன் தான் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் சிவன்.

Also Read | டாக்டர் ரிலீஸ் குறித்து வெளியான புதிய தகவல்; படக்குழு முக்கிய முடிவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News