Bigg Boss Tamil 6: எதிர்பாராததை எதிர்பாருங்கள்... எவிக்டான முக்கிய ஹவுஸ்மேட் - யார் தெரியுமா?
பிக்பாஸ் தமிழ் சீசன் 6 தொடர் 70ஆவது நாளை நெருங்கிவிட்ட நிலையில், இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 6 தொடர் 70ஆவது நாளை நெருங்கிவிட்ட நிலையில், இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஐந்து சீசன்களை கடந்து தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. மற்ற சீசன்களை போலவே இந்த சீசனிலும் சண்டைக்கும் பஞ்சமில்லை, ரொமான்ஸுக்கும் பஞ்சமில்லை.
ஆனால் சில ரோமியோக்கள் இந்த சீசனை விட்டு வெளியேறியதில் இருந்து பெரிதாக ரொமான்ஸ் காட்சிகள் இல்லை. மாறாக அதிரடி காட்சிகள் மட்டும் இருந்து வருகிறது. இருப்பினும் இந்த நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்ததாக இருப்பதாகவே சிலர் கருதுகின்றனர்.
மொத்தம் 21 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த போட்டியில் இருந்து இதுவரை மொத்தம் 10 பேர் வெளியேறிவிட்டனர். முதலில் ஜி.பி.முத்து தானாகவே முன்வந்து விலகினார், அவரை தொடர்ந்து சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி, மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
மேலும் படிக்க | இவங்கதாங்க டாப் 3 பிக்பாஸ் பைனலிஸ்ட்...முன்னணியில் இருப்பது யார்
இந்த சீசன், 70ஆவது நாளை நெருங்கிவிட்ட நிலையில் இதில் இறுதிப் போட்டியாளர்களாக யார் இருப்பார்கள் என்ற கணிப்பு தற்போதே தொடங்கிவிட்டது. ஆனால், அதற்கு முன்பாக பல்வேறு நபர்கள் வெளியேற்றப்பட உள்ளனர்.
தற்போது, அசீம், ஜனனி, மணிகண்டன், ரச்சிதா, விக்ரமன், ஏடிகே ஆகியோர் இந்த வார எவிக்ஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் அசீம், விக்ரமன் ஆகியோர் இடையே கடுமையான சண்டை நிலவுதால் அவர்கள் கடைசிவரை ஆட்டத்தில் நீடித்திருப்பார்கள் என்றும், ஜனனிக்கு அதிக ரசிகர் கூட்டம் இருப்பதால் அவரும் இந்த வாரம் தப்பித்துவிடாவார் என கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் தற்போது வெளியேற்றப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த வார எவிக்ஷன் பட்டியலில் இருந்த ஏடிகே வெளியேறிவிட்டதாக தற்போது தகவல்கள் கூறப்படுகிறது.
இந்த வாரம் ரச்சிதா, மணிகண்டன் ஆகியோரில் யாராவது ஒருவர்தான் வெளியேற வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஏடிகே வெளியேறிவிட்டதாக வெளிவந்த தகவல் ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தாரக மந்திரம் என்பதால், ஏடிகே வெளியேறியிருந்தாலும், எந்த ஆச்சர்யமும் இல்லை என நெட்டிசன்கள் சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | பிக்பாஸ் ஆயிஷாவுக்கு எவ்வளவு செட்டில்மெண்ட் ஆச்சி..? வெறும் இத்தனை தானா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ