பிக்பாஸ் அல்டிமேட்டில்; வெளியானது பைனல் ரிசல்ட், யாருக்கு எந்த இடம்
பிக்பாஸ் அல்டிமேட்டில் வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, அபிராமி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 14 பேர் கலந்துகொண்டனர்.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் தமிழ் ஒளிபரப்பாகி வந்தது. 60 நாட்கள் என தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 67 நாட்களைக் கடந்தது. 14 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த ஷோவில் டாப் 4 போட்டியாளர்களாக ரம்யா பாண்டியன், நிரூப், பாலாஜி முருகதாஸ் மற்றும் தாமரை ஆகியோர் இருந்தனர். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த அபிராமி மற்றும் ஜூலி ஆகியோர் கடந்த சில நாட்களில் இரவு நேர எலிமினேஷனில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இதில் பிக்பாஸ் அல்டிமேட் இல் பண பெட்டியுடன் வெளியேறும் வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு ஸ்ருதி 15 லட்சத்துடன் வெளியேறினார்.
மேலும் படிக்க | பிக்பாஸ் அல்டிமேட்டில் சிம்புவுடன் ஹன்சிகா - இந்த படத்தின் புரோமோஷனுக்காகவாம்
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பிடித்த பாலாஜி முருகதாஸ் இந்த சீசனில் முதல் இடத்தை பிடித்து இருகிறார். இதனை நடிகர் சிம்பு அறிவித்தார். மேலும் இந்த சீசனில் 50 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் பணப்பெட்டி டாஸ்க்கில் 15 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு சுருதி வெளியேறியதால் அந்த பணம் வெற்றியாளரின் பணத்தில் இருந்து கழிக்கப்பட்டு 35 லட்ச பரிசை வென்றிருக்கிறார் பாலாஜி முருகதாஸ்.
அதேபோல் இந்த சீசனில் இரண்டாம் இடத்தை நிரூப்பும் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை ரம்யாவும் பெற்றுள்ளனர். அதன்படி நிகழ்ச்சியில் பலவித சோதனைகளை கட்ந்து வந்து முதல் இடத்தை பிடித்து வின்னராக ஜொலிக்கும் பாலாவுக்கு சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
முன்னதாக பிக்பாஸ் அல்டிமேட்டில் வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, அபிராமி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 14 பேர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பிக்பாஸில் இருந்து அனிதா வெளியேற இவர் தான் காரணமா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR