பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட சினேகன், பாடலாசிரியர், நடிகர், அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டவர். தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியில் இருக்கிறார். அவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. திரைப்படம், அரசியல் என பிஸியாக இருக்கும் அவர், நடிகை ஜெயலட்சுமி மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், நடிகை ஜெயலட்சுமி தான் நடத்தி வரும் ‘சினேகம் அறக்கட்டள' பெயரை பயன்படுத்தி பணம் வசூலிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பதிலுக்கு நடிகை ஜெயலட்சுமியும் பாடலாசிரியர் சினேகன் மீது புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தான் நடத்தி வரும் அறக்கட்டளை வழியாகவே சமூக பணிகளை செய்து வருவதாக தெரிவித்திருந்தார். தன் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சினேகன் பொய் புகார் கொடுத்திருப்பதாகவும், ஜெயலட்சுமி தன்னுடைய புகாரில் குற்றம்சாட்டிருந்தார். இதனிடையே, தான் கொடுத்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நடிகர் சினேகன். 



மேலும் படிக்க | நடிப்பது 2 கோடிக்கு வாங்குவது 200 கோடி - சூப்பர் ஸ்டாரை சீண்டிய கங்கனா ரணாவத்


அதன்பிறகு கோர்ட் வழிகாட்டுதல்படி நடிகை ஜெயலட்சுமி மீது திருமங்கலம் போலீசார் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளனர். அதேநேரத்தில், தற்போது ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் தன்னை கைது செய்யக்கூடாது என்று சினேகன் சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சினேகனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும், மறு உத்தரவு வரும்வரை சினேகன் திருமங்கலம் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவில் தெரிவித்துள்ளது. சாட்சிகளை கலைக்ககூடாது என்று நிபந்தனையும் நீதிமன்றம் விதித்துள்ளது. 


மேலும் படிக்க | இந்தியன் 2வில் களமிறங்கும் யுவராஜ் சிங் தந்தை - புகைப்படம் வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ