பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா நேற்று இரவு கார் விபத்தில் சிக்கினார். வேலை முடிந்து தனது வீட்டுக்கு திரும்பும் வழியில் அவர் விபத்துக்குள்ளானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது தலையில் காயம் ஏற்பட்டதால், அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பாகுபலிக்குப் பிறகு புதிய படத்தில் ஜோடி சேரும் அனுஷ்கா - பிரபாஸ்?



இந்நிலையில், மலைக்காவின் சகோதரி அம்ரிதா அவரது உடல்நிலை குறித்து பேசியுள்ளார். அப்போது, “மலைக்கா உடல் நிலை தற்போது நன்றாக உள்ளது. தலையில் அடிபட்டுள்ளதால் கண்காணிப்பில் உள்ளார். இன்னும் சிறிது நேரம் மருத்துவ கண்காணிப்பில் இருந்த பிறகு இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என நினைக்கிறேன். சிடி ஸ்கேன் முடிவுகளில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றே வந்துள்ளது. ” என்று கூறியுள்ளார்.



மேலும் படிக்க | பீஸ்ட் படத்தில் உள்ள 3 படங்களின் பாதிப்புகள்: யோகி பாபு படத்தின் காப்பியா?


நேற்று மாலை புனேவில் பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபின் ககாரில் வீட்டுக்கு சென்ற போது அவருக்கு விபத்து நடந்துள்ளது. பேருந்தை ஓவர் டேக் செய்ய முயன்ற இரண்டு கார்கள் நிலை தடுமாறியதில், ஒரு கார் மலைக்காவின் கார் மீது மோதியுள்ளது. இதனையடுத்து இந்த விபத்து குறித்து கொபோலி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எஃப் ஐ ஆர் போடப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மலைக்கா அரோரா மணிரத்தினம் இயக்கத்தில் உருவான உயிரே படத்தில் இடம்பெற்ற தக்க தைய்ய தைய்யா பாடலுக்கு நடனமாடியவர். அந்த பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR