பாகுபலிக்குப் பிறகு புதிய படத்தில் ஜோடி சேரும் அனுஷ்கா - பிரபாஸ்?

பாகுபலி படத்துக்குப் பிறகு பிரபாஸ் மற்றும் அனுஷ்கா மீண்டும் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 2, 2022, 04:25 PM IST
  • பிரபாஸ் - அனுஷ்கா மீண்டும் இணையும் புதிய படம்
  • அனுஷ்கா இன்னும் ஜோடி சேருவது குறித்து முடிவெடுக்கவில்லையாம்
  • பிரபாஸ் இயக்குநரிடம் ஒகே சொல்லிவிட்டாராம்
பாகுபலிக்குப் பிறகு புதிய படத்தில் ஜோடி சேரும் அனுஷ்கா - பிரபாஸ்?  title=

பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஷெட்டி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என அவர்களது ரசிகர்கள் விரும்புகின்றனர். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த அவர்களின் கனவு விரைவல் நிறைவேறும் என தெரிகிறது. இயக்குனர் மாருதியின் ராஜா டீலக்ஸ் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க இரு நட்சத்திரங்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்தப் படத்தில் பிரபாஸ் இணைவது உறுதியாகிவிட்ட நிலையில், அனுஷ்காவுடனான பேச்சுவார்த்தை இன்னும் தொடர்வதாக தெரிகிறது. அனுஷ்கா முடிவெடுத்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

மேலும் படிக்க | அடிச்சது தப்புதான், கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பு கோரிய வில் ஸ்மித்

பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஷெட்டி 

பிரபாஸும் அனுஷ்கா ஷெட்டியும் பல வருடங்களாக நண்பர்களாக உள்ளனர். பாகுபலி படத்தில் இருவரின் கெமிஸ்டிரியும் சிறப்பாக இருந்ததால், அவர்கள் காதலிப்பதாகவும் தகவல்கள் உலா வந்தன. அவர்கள் மறுத்தபோதும் மீண்டும் மீண்டும் அவர்கள் காதல் பற்றியும், சில நேரங்களில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் வதந்திகள் பரவின. ஆனால், தாங்கள் இருவரும் சிறந்த நண்பர்கள், அவ்வளவு தான் என நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டனர்.  

’ராஜா டீலக்ஸ்’ புதிய படம்

சாஹோ இயக்குநர் மாருதி புதிய படம் ஒன்றை இயக்குகிறார். ராஜா டீலக்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த படம் முழு நீள நகைச்சுவை படமாக உருவாக உள்ளது. பிரபாஸூக்கு ஜோடியாகவும், கதாப்பாத்திரத்துக்கு பொருத்தமாகவும் அனுஷ்கா இருப்பார் என இயக்குநர் மாருதி முடிவெடுத்துள்ளார். பிரபாஸூம் ஓகே சொல்லிவிட்டதால், அனுஷ்காவிடம் படம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், படத்தில் இணைவது குறித்து அதிகாரப்பூர்வமாக அனுஷ்கா இன்னும் முடிவெடுக்கவில்லையாம். 

பிரபாஸ் பற்றி அனுஷ்கா

அனுஷ்கா மற்றும் பிரபாஸ் ஆகியோர் ஏற்கனவே பாகுபலி, பில்லா, மிர்ச்சி ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அனுஷ்காவிடம், பிரபாஸ் பற்றி கேட்கப்பட்டது. அப்போது, அதிகாலை நண்பர் என தெரிவித்தார். ராஜா டீலக்ஸ் இயக்குநர் இப்போது ராஷி கண்ணா நடித்துள்ள படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தின் பணிகளுக்குப் பிறகு ராஜா டீலக்ஸ் படத்தின் சூட்டிங் தொடங்க உள்ளது.

மேலும் படிக்க | கேஜிஎப் 2 படத்தால் பிரபாஸின் கெரியருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News