பீஸ்ட் படத்தில் உள்ள 3 படங்களின் பாதிப்புகள்: யோகி பாபு படத்தின் காப்பியா?

பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியானதன் மூலம் கதை முழுவதும் தெரியவந்துள்ளது. துப்பாக்கி படத்தின் சாயலில், கூர்கா படத்தின் பாதிப்பு ட்ரெய்லரில் எதிரொலித்துள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 2, 2022, 09:11 PM IST
  • துப்பாக்கி VS பீஸ்ட் ஒற்றுமை
  • கூர்கா vs பீஸ்ட் கதை
  • மணி ஹெய்ஸ்ட் பாதிப்பு
பீஸ்ட் படத்தில் உள்ள 3 படங்களின் பாதிப்புகள்: யோகி பாபு படத்தின் காப்பியா?  title=

பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியானதன் மூலம் கதை முழுவதும் தெரியவந்துள்ளது. துப்பாக்கி படத்தின் சாயலில், கூர்கா படத்தின் பாதிப்பு ட்ரெய்லரில் எதிரொலித்துள்ளது.  

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லீ, சிவா அரவிந்த், சுனில் ரெட்டி, ஷாஜி உள்ளிட்ட மற்றும் பலர் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு படத்தின் ட்ரெய்லர் வெளியானது.  விஜய்யின் ரசிகர்கள் பீஸ்ட் ட்ரெய்லரைக் கண்டு உற்சாகம் அடைந்துள்ளனர். 

ட்ரெய்லர் மூலம் படத்தின் கதை குறித்த தகவல்களும், எந்தப் படங்களின் பாதிப்பில் கதை உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. துப்பாக்கி படத்தில் ராணுவத்தில் பணிபுரியும் அதிகாரியான விஜய் பெண் பார்க்கும் படலத்துக்காக சொந்த ஊருக்கு வருகிறார். அங்கு நண்பனின் திருமணத்தில் பங்கேற்கிறார். தீவிரவாதிகள் ஊடுருவலை அறிந்து ஸ்லீப்பர் செல்களை அழிக்க திட்டம் தீட்டி, பயங்கரவாதிகளின் சதிகளை முறியடிக்கிறார். இதுதான் துப்பாக்கி படத்தின் கதை. 

மேலும் படிக்க | பீஸ்ட் படத்தில் விஜய்யின் பெயர் இதுதான்! வெளியான தகவல்

கூர்கா படத்தில் யோகி பாபு போலீஸாக நினைக்கிறார். ஆனால், அவரால் போலீஸாக முடியவில்லை. இந்நிலையில் மால் ஒன்றில் செக்யூரிட்டியாகப் பணிபுரிகிறார். அந்த மாலில் உள்ள பொதுமக்களைத் தீவிரவாதிகள் திடீரென்று சிறைப்பிடித்து பணயக் கைதிகளாக்கி அடைத்து வைக்கிறார்கள். இந்நிலையில் போலீஸ் அந்த மாலுக்குள் நுழைய முடியாமல் திணற, யோகி பாபு எப்படி மக்களைக் காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை. கிட்டத்தட்ட இதே சாயலில் பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் உள்ளது. 

மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸில் மக்களைப் பணயக் கைதிகளாக வைத்து 12 பேர் கொள்ளையடிப்பார்கள். பீஸ்ட் படத்தில் கொள்ளை கும்பலிடம் சிக்கி பணயக் கைதிகளாக இருக்கும் பொதுமக்களை ஹீரோ எப்படிக் காப்பாற்றுகிறார் என்று கதையைக் கட்டமைத்துள்ளனர். 

பீஸ்ட் படத்தில் ஜெட் விமானத்தை இயக்கும் ராணுவ வீரர் விஜய் ஒரு மாலில் இருக்கிறார். அந்த வணிக வளாகத்தை ரவுண்ட் அப் செய்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் தீவிரவாதிகள் அங்குள்ள பொதுமக்களைப் பணயக் கைதிகளாக வைத்து டிமாண்ட் செய்கின்றனர். இந்நிலையில் அந்தக் கூட்டத்துக்குள் ஒருவராக இருக்கும் ஹீரோ அவர்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் கதையாகச் சொல்லப்பட்டுள்ளது. 

இதில் சோகம் என்னவென்றால் கூர்கா படத்தில் நாயகனாக நடித்த யோகி பாபு பீஸ்ட் படத்தில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதுதான். அவர் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும்? இப்போது ஒரு முறை நீங்களே ட்ரெய்லரைப் பார்த்து பீஸ்ட் படத்துக்கும் மேற்கண்ட படங்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

மேலும் படிக்க |  பீஸ்ட் படத்தின் FDFS டிக்கெட் விற்பனை தொடங்கியது! எங்கு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

 

 

 

Trending News