இந்தியாவில் ஹாலிவுட் படங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக மார்வல் படங்களுக்கு நம்ம ஊரில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். மார்வல் ஹீரோக்களுள் ரசிகர்களின் தனி கவனத்தை பெற்றவர், கிறிஸ் எவான்ஸ். இவரது முழு பெயரை விட, ‘கேப்டன் அமெரிக்கா’ என்று கூறினாலே ரசிகர்களுக்கு அதிகம் தெரியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேப்டன் அமெரிக்கா:


மார்வல் யுனிவர்ஸில் வரிசையாக பல படங்கள் வெளியாகி உலக அளவில் பயங்கர வரவேற்பை பெற்றுள்ளன. இதில் அனைத்து மார்வல் ஹீரோக்களும் கடைசியாக ஒன்றிணைந்த படம், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம். இதில் ஐயர்ன் மேன், ப்ளாக் பாந்தர், தோர், ஸ்பைடர் மேன், ஆண்ட் மேன் என பல முக்கிய கதாப்பாத்திரங்கள் இருக்கின்றனர். அதில் மிக முக்கியமானவராக கருதப்படுபவர், கேப்டன் அமெரிக்கா. உலகளவில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள ஹாலிவுட் பிரபலங்களுள் இவரும் ஒருவர். 


காதலியை கரம் பிடித்த கிறிஸ்..?


கிறிஸ் எவான்ஸ், போர்த்துகீஸ்-அமெரிக்க நடிகை ஒருவரை டேட்டிங் செய்து வருவதாக கடந்த ஆண்டு தகவல்கள் வெளியானது. அவரது பெயர், ஆல்பா பேப்டிஸ்டா. இவரும் கிறிஸ் எவான்ஸும் ஒரு திரைப்பட விழாவில் பார்த்துக்கொண்டதாகவும் அதிலிருந்து இருவரும் ஆங்காங்கே வெளியில் சென்று தங்களது காதலை வளர்த்து கொண்டதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. இந்த நிலையில், இவர்கள் இப்போது தங்களது வீட்டில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 


இவ்வளவு வயது வித்தியாசமா..? 


திரையுலகை பொறுத்தவரை பல நடிகர் நடிகைகள் தங்களை விட வயது குறைவானவர்களை திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த லிஸ்டில் தற்போது கிறிஸ் எவான்ஸும் இணைந்துள்ளார். இவருக்கு வயது, 42 ஆகிறது. ஆனால் இவர் தற்போது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் ஆல்பா பாப்டிஸ்டாவிற்கு வயது 26. இவர்களுக்கும் இருக்கும் இந்த 16 வயது வித்தியாசத்தை நெட்டிசன்கள் சிலர் நோட்டமிட்டு சமூக வலைதளங்களில் மேற்கோள் காட்டி வருகின்றனர். 


மேலும் படிக்க | சுத்தமா‌ Vibe ‌இல்ல... கடுப்பாக இருந்ததா‌ விஜய் ஆண்டனி‌ கச்சேரி...? - ரசிகர்கள் ரியாக்சன்!


திருமணத்திற்கு வந்த சூப்பர் ஹீரோக்கள்!


மார்வெல் ஹீரோக்கள் படத்தில் எந்த அளவிற்கு நட்பு பாராட்டுகின்றனரோ, அதே அளவிற்கு தனி வாழ்க்கையிலும் சகோதரர்களை போல பழகி வருகின்றனர். இந்த திருமணத்திற்கு வருபவர்கள், இது குறித்த தகவல்கள் எதையும் வெளியில் சொல்லக்கூடாது என ஓப்பந்தம் போடப்பட்டுள்ளதாம். அது மட்டுமன்றி, விழாவில் கலந்து கொள்ளும் போது அவர்கள் தங்களது செல்போன்களையும் கொடுத்துவிட வேண்டுமாம். ஐயர்ன் மேனாக நடித்த Robert Downy Jr, தோர் கதாப்பாத்திரத்தில் நடித்த Chris Hemsworth, பிரபல நடிகை Emily Blunt உள்ளிட்ட பலர் அவர்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது மட்டுமன்றி, இவர்கள் அனைவரும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இந்த திருமண குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்துக்கொண்டுள்ளனர். 


யார் இந்த ஆல்பா பேப்டிஸ்டா..? 


ஆல்பா பாப்டிஸ்டா, ஹாலிவுட்டின் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். போர்த்துகீஸிய நடிகையான இவர், அந்த மொழியை சேர்ந்த சில தொடர்களிலும் நடித்துள்ளார். இவருக்கு ஹாலிவுட்டில் அங்கீகாரம் கொடுத்தது, வாரியர் நன் என்ற வெப் தொடர்தான். இந்த தொடர் இரண்டு சீசன்களாக நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. இதன் மூலமாகத்தான் அவர் ஆங்கில தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். அதில், இவர் பறந்து பறந்து சண்டை போடும் சாகச பெண்மணியாக வந்திருந்தார். இவரை வாரியர் நன் தொடரில் ரசித்த சிலர், “கேப்டன் அமெரிக்காவிற்கு ஏற்ற சண்டைக்காரிதான் போல..” என கமெண்ட் செய்து வருகின்றனர். 


மேலும் படிக்க | மறக்கவே முடியாத ஏஆர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரி.. கடும் கோபத்தில் ரசிகர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ