படத்திற்காக சொந்த பெயரை மாற்றிய நடிகைகள்!

திரைபடங்களில் நடிப்பதற்காக தனது சொந்த பெயரை மாற்றிய சில நடிகைகள் மாற்றியுள்ளனர். 

திரைபடங்களில் நடிப்பதற்காக தனது சொந்த பெயரை மாற்றிய சில நடிகைகள் மாற்றியுள்ளனர். 

 

1 /6

அமலா பால் :   தமிழில் அறிமுகமாகும்போதே தனது பெயரை மாற்றிக்கொண்ட பிரபல நடிகைகளில் ஒருவர். மலையாளத்தில் தனது உண்மையான பெயருடன் நடிக்க தொடங்கிய அமலா, சிந்து சமவெளி படத்தில் 'அனகா' என்ற பெயரில் அறிமுகமானார்.  இப்படம் தோல்வியடைந்ததால் 'அனகா' என்கிற பெயர் தனக்கு ராசியில் என்று மீண்டும் தனது சொந்த பெயரான அமலா என்கிற பெயரையே வைத்துக்கொண்டார். 

2 /6

ரம்யா :  தமிழில் 'குத்து' படத்தின் மூலம் பிரபலமானவர் திவ்யா ஸ்பந்தனா.  இப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் கோலிவுட்டில் 'குத்து ரம்யா' என்றே அடையாளம் காணப்பட்டார்.  2007-ல் பொல்லாதவன் படத்தில் நடிக்கும்பொழுது திவ்யா ஸ்பந்தனா என்ற பெயரையே தேர்வு செய்தார்.  பின்னர் 'வாரணம் ஆயிரம்' படத்தின் மூலம் திவ்யா என்றே அறியப்பட்டார். 

3 /6

ராஷ்மி கோபிநாத் :  யோகி பாபுவுடன் காக்டெய்ல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ராஷ்மி கோபிநாத்.  பலரும் இவரது பெயரை சரியாக உச்சரிக்காத காரணத்தால் இவர் தனது பெயரை நிவிக்ஷா என்று மாற்றியுள்ளார்.

4 /6

சுனைனா :  தமிழ் 'காதலில் விழுந்தேன்' படம் மூலம் பிரபலமானவர் நடிகை சுனைனா.  இவர் நடிப்பில் வெளியான நீர்ப்பறவை படம் அதிக வரவேற்பை பெற்றது.  2013-ல் தனது பெயரை அனுஷா என்று மாற்றுவதாக அறிவித்தார்.  பின்னர் தனது சொந்த பெயர் sunaina என்பதுடன் கூடுதலாக ஒரு 'a' சேர்த்து sunainaa என்று மாற்றிக்கொண்டார்.

5 /6

அதிதி மேனன் அல்லது மிர்னா   அதிதி மேனன் கோலிவுட்டில் 'பட்டதாரி' படத்தின் மூலம் அறிமுகமானார் அதிதி மேனன்.  இவர் நடித்த  களவாணி மாப்பிள்ளை போன்ற சில படங்கள் தோல்வியடைந்ததால் தனது பெயரை மாற்ற முடிவு செய்து தற்போது 'மிர்னா' என்று அழைக்கப்படுகிறார்.  

6 /6

வசுந்தரா காஷ்யப் :  2006 ஆம் ஆண்டு வெளியான 'வட்டாரம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் வசுந்தரா.  அதிசயா என்கிற பெயரில் அறிமுகமானவர் பேராண்மை மற்றும் தென்மேற்கு பருவக்காற்று போன்ற படங்களில் தனது சொந்த பெயரான வசுந்தரா என்கிற பெயருடனேயே  நடிக்க முடிவு செய்தார்.  தற்போது இவர் வசுந்தரா காஷ்யப் என்ற பெயரில் அறியப்படுகிறார்.