இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவசக்தி செளந்தர் ராஜன் கடந்த 2010ஆம் ஆண்டு பிரசன்னா நடிப்பில் வெளியான நாணயம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து சிபிராஜ் நடித்த நாய்கள் ஜாக்கிரதை படத்தை இயக்கிய அவர், அப்படத்தில் நாய்க்கும் மனிதனுக்கும் இடையேயான அன்பை நேர்த்தியாக கூறப்பட்டிருந்ததால் படமும் நல்ல வெற்றி பெற்றது. இதனால் சக்தி சௌந்தர்ராஜன் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு எகிறியது. அந்த சூழலில் ஜெயம் ரவியை வைத்து மிருதன் என்கிற ஜாம்பி படத்தை இயக்கினார். தமிழில் வெளியான முதல் ஜாம்பி படம் இதுவென்றாலும் ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. அதேபோல் விண்வெளியை மையமாக வைத்து இயக்கிய டிக் டிக் டிக் படமும் தோல்வியடைந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதனைத் தொடர்ந்து ஆர்யாவுடன் இணைந்த சக்தி சௌந்தர்ராஜன் டெடி படத்தை இயக்கினா. தற்போது மீண்டும் ஆர்யாவுடன் கைகோர்த்திருக்கும் சக்தி தற்போது கேப்டன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். 



திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் "கேப்டன்" திரைப்படம் செப்டம்பர் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.


இந்நிலையில், திருநெல்வேலிக்கு சென்ற நடிகர் ஆர்யா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,"கேப்டன் திரைப்படம் ஹாலிவுட்டுக்கு இணையாக தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போல கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் பல காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆங்கில படத்திற்கு இணையாக இந்த படம் உருவாகியுள்ளது. இது தற்போது தமிழ்நாட்டில் புது முயற்சியாக இருக்கும்.


 



சிறுவர்களை அதிகமாக கவரக்கூடிய படமாகவும் இருக்கும். அதிக பொருள் செலவில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. காடுகளில் அதிக  நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திரைத்துறை பாதுகாப்பான சூழ்நிலையில் உள்ளது. கடந்த காலங்களில் திரையரங்குகளில் காட்சிகள் மிக குறைவாக இருந்தது. ஆனால் தற்போது காட்சிகள் அதிகமாக இருப்பதன் காரணமாக 100 நாட்களில் கிடைக்கும் வசூல் இரண்டு நாட்களிலேயே கிடைத்துவிடுகிறது” என்றார்.


மேலும் படிக்க | கோப்ரா படத்திற்கு விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEata