2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தின் அடுத்த பாகம் விரைவில் வெளியாக உள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்களாக சில நடிகர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சந்திரமுகி 2: 


ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்த ‘சந்திரமுகி’ படம், 2005ஆம் ஆண்டு வெளியானது. மலையாளத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியன மணி சித்திரத்தாழு படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகியிருந்தது. இதனை பி.வாசு இயக்கியிருந்தார். இந்த இந்த படம், கிட்டத்தட்ட 200 நாட்களை கடந்து வெற்றி பெற்றது. தற்போது, 18 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரமுகி 2 படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். 


மேலும் படிக்க | தேசிய விருதுக்கு தேர்வாகியிருக்கும் தமிழ் படங்கள்..! முழு லிஸ்ட் இதோ!


இசை வெளியீட்டு விழா:


சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை ஜேப்பியார் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். 



இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ராகவா லாரன்ஸ், விழா நன்றாக நடைபெற அனைவரது ஆசிர்வாதமும் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 


கதை என்ன..? 


ஒரு ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ‘வேட்டையபுரம் அரண்மனை’. இதில் உள்ள ஆபத்து தெரியாமல் குடும்பத்தினருடன் குடிபுகும் கணவன்-மனைவி. படத்தில் பேய் வரும் என்று நினைத்தால், ட்விஸ்டாக வந்து நிற்கிறது ‘Split Personality Disorder’. இதனால் ‘சந்திரமுகி’ எனும் கதாப்பாத்திரமாக மாறும் நாயகி. இறுதியில் நடந்தது என்ன? இப்படி த்ரில்லிங் கதையம்சத்துடன் இருந்த படம்தான், 2005ஆம் ஆண்டில் வெளியான சந்திரமுகி படத்தின் கதை. இதன் இரண்டாம் பாகத்தின் கதை சற்றே வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்கக்ப்படுகிறது. சந்திரமுகி முதல் பாகத்தில் வந்த கதாப்பாத்திரம் எதுவுமே அதன் இரண்டாம் பாகத்தில் இல்லை. வடிவேலுவின் ‘முருகேசன்’ கதாப்பாத்திரம் மட்டுமே இந்த படத்திலும் தொடர்கிறது.  இதுவரை வெளியாகியுள்ள படத்தின் ஸ்டில்ஸ்களில், நடிகை கங்கனா ரணாவத் சந்திரமுகியாக காண்பிக்கப்பட்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. 


பேய் படத்தில் 10 பாடல்கள்..


‘சந்திரமுகி 2’ படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைத்துள்ளார். இவர், ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக ஆஸ்கார் விருது வாங்கி பிரபலமானார். சந்திரமுகி 2 படத்தின் முதல் பாடல், சில தினங்களுக்கு முன்பு வெளியானது. லிரிக்கல் வீடியோவாக வெளியாகியிருந்த இந்த பாடலுக்கு ‘ஸ்வாகதாஞ்சலி’ என்று பெயரிடப்பட்டிருந்தது. இதில் படத்தின் நாயகி கங்கனா ரணாவத் நடனமாடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ராகவா லாரன்ஸ், வேட்டையன் ராஜாவின் கெட்-அப்பில் இருக்கும் புகைப்படமும் இதில் இடம் பெற்றிருந்தது. இப்பாடலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்துள்ளனர். 5 நாட்களுக்கு முன்னர் வெளியான இப்பாடல் தற்போது 5.4 மில்லியன் வியூஸ்களை கடந்தது. படத்தின் இரண்டாவது சிங்கிளும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது. சந்திரமுகி 2 படத்தில் மொத்தம் 10 பாடல்கள் இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | 10 ஆண்டுகளில் பல பாடகர்களை திரையுலகிற்கு அறிமுகம் செய்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ