10 ஆண்டுகளில் பல பாடகர்களை திரையுலகிற்கு அறிமுகம் செய்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, 10 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட பாடகர்களைத் தமிழ் திரையுலகிற்கு,  அறிமுகப்படுத்தியுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Aug 24, 2023, 01:41 PM IST
  • விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.
  • இதில் இதுவரை பலர் கலந்து கொண்டு முன்னணி பாகர்களகாக உள்ளனர்.
  • இதுவரை 30க்கும் மேற்பட்ட பாடகர்களை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி அறிமுகம் செய்து வைத்துள்ளது.
10 ஆண்டுகளில் பல பாடகர்களை திரையுலகிற்கு அறிமுகம் செய்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி..!  title=

தமிழின் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள்,  கலந்துகொள்ளும்  இந்த  ர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி  வருகின்றனர். 

சூப்பர் சிங்கர்: 

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் நடுவர்களாக கலந்துகொள்ளும், இசையமைப்பாளர்கள் பலருக்குப் அவர்களின் திறமையை நிரூபிப்பதற்காக வாய்ப்பளித்து வருகின்றனர்.  மாற்றுத்திறனாளிகள் ஏழ்மை நிலையில் இருக்கும் திறமையாளர்கள் பலர் இந்நிகழ்ச்சி மூலம் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். நெகிழ்ச்சியான பற்பல தருணங்களும் இந்த நிகழ்ச்சியில் அரங்கேறி வருகிறது. 

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர்,  ஜூனியர்  எனப் பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. இந்த பிரிவுகளிலிருந்தும் பல திறமையான பாடகர்கள் திரைத்துறையில் பிரபல பாடகர்களால் பல பாடல்கள் பாடி வருகின்றனர்.

மேலும் படிக்க | ‘ஜெயிலர்’ படத்தின் துணை நடிகருக்கு கிப்ட் கொடுத்த ரஜினி..! யார் அந்த நடிகர் தெரியுமா..?

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானோர்:

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம், 30 க்குமேற்பட்ட பாடகர்கள் 13க்கும் மேற்பட்ட  முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில், 250க்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளனர். இசைத்துறைக்கு மிகப்பெரும் பங்களிப்பதோடு,  பல திறமையாளர்களுக்கு ஏற்றம் தரும் நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர். சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியல் ஆஜித், பூவையார், நித்யஶ்ரீ, ஹரிப்பிரியா, பிரியங்கா, பிரகதி குரு பிரசாத் என பல திறமையாளர்கள் திரைத்துறையில் முன்னணி பாடகர்களாக வலம் வருகின்றனர். குறிப்பாக பூவையாருக்கு சில படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

சீனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமான பாடகர்கள்  பூஜா வைத்தியநாத், சத்திய பிரகாஷ், திவாகர், செந்தில் கணேஷ், ரக்‌ஷிதா சுரேஷ், பூவையார், ஷாம் விஷால், சிவாங்கி, யோகி சேகர், ஆதித்யா RK  தென்னிந்தியத் திரைத்துறையில் மிகச்சிறந்த  பாடகர்களாகக் விளங்குகின்றனர். 

மேலும் இசையமைப்பாளர் நடத்தும் வேர்ஃல்ட் டூர், வெளிநாட்டு இசை கச்சேரி, உள்நாட்டு இசைக்கச்சேரி என, பல இசை நிகழ்ச்சிகளிலும் பாடகர்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர்களே பங்கு பெற்று வருகிறார்கள். திறமையாளர்களை வெளிச்சமிட்டுக் காட்டுவதுடன், அவர்களுக்கு வப்புகளைக் குவித்துத் தரும் புகலிடமாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விளங்குவதாக இந்நிகழ்ச்சியின் இந்நாள் மற்றும் முன்னாள் போட்டியாளர்கள் கருதுகின்றனர். 

தற்போது சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 9 நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நிகழ்ந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சிறுவன் கலர்வெடி கோகுல், தனது அண்ணன் சரவெடி சரவணன் எழுதிய கானா பாடலை,  கொண்டாட்டத்துடன் பாடி அனைவரையும் பிரமிக்க வைத்தார். 

எளிமையான குடும்பத்தில் பிறந்து, குடும்ப பாரத்தை தன்மேல் சுமந்துகொண்டு, கானாவில் எதிர்காலத்தைக் கனவு காணும் கலர்வெடி கோகுலுக்கு, அவரின் வாழ்க்கையை மாற்றும் பெரும் ஆசீர்வாதத்தைத் தந்தார் இசையமைப்பாளர் தமன். இந்நிகழ்ச்சியின் போது, வரும் தீபாவளிக்குள், ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தின் படத்தில், அவர் அண்ணண் பாடல் எழுதவும், கலர்வெடி கோகுல் பாடவும் வாய்ப்பளிப்பதாக உறுதியளித்தார் இசையமைப்பாளர் தமன்.  ஒரு போட்டி நிழச்சியாக மட்டுமல்லாமல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, திறமையால் ஒளிரும் பலருக்கு மாற்றம் தந்து வருவது பெருமையளிப்பதாக இப்போட்டியை நடத்துவோர் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | தேசிய விருதுக்கு தேர்வாகியிருக்கும் தமிழ் படங்கள்..! முழு லிஸ்ட் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News