ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் சந்திரமுகி 2. இப்படம், கடந்த மாதம் (செப்டம்பர்) 28ஆம் தேதி வெளியானது. இது, ஓடிடியில் வெளியாவது எப்போது? முழு விவரம் இதோ. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சந்திரமுகி 2:


ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்த சந்திமுகி திரைப்படம் 2005ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 17ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடன கலைஞரும் இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துள்ளார். 


முதல் படத்தை இயக்கிய பி.வாசுதான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். அதே வேட்டையபுரம் அரண்மனை, அதே சந்திரமுகி, அதே வேட்டையன் ராஜாதான் இந்த படத்திலும் முக்கிய புள்ளிகள். முந்தைய பாகத்தில் கதையை சைக்காலஜி த்ரில்லர் பாணியில் முடித்தனர். ஆனால் இந்த படமோ முழுக்க முழுக்க பேய்-த்ரில்லர் பாணியில் படம் பயணிக்கிறது. 


சந்திரமுகி 2 ஓடிடி ரிலீஸ்:


சந்திரமுகி 2 திரைப்படம், திரையரங்குகளில் வெளியானதற்கு ஆறு முதல் எட்டு வாரங்களில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் (நவம்பவர்) 10 முதல் 15 தேதிகளில் இப்படம் ஒரு பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதன் ஓடிடி ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டுள்ளனர். 


மேலும் படிக்க | Chandramukhi 2 Review: சந்திரமுகி 2 படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ


பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்:


லைகா நிறுவனம் தயாரித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படம் சுமார் 80 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. படம், சுமார் 80 கோடிக்கும் மேல் செலவு செய்யப்பட்டு உருவானதாக கூறப்படுகிறது. இப்படம், வெளியான முதல் நாளிலேயே 7.5 கோடி ரூபாய் கலெக்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளியாகி 6 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இந்த வசூல் தற்போது பன்மடங்காக உயர்ந்து 70 கோடியை தாண்டியுள்ளது. 


ரசிகர்களின் விமர்சனம் என்ன? 


சந்திரமுகி 2 படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியான போது ரசிகர்கள் “முதல் படம் அளவிற்கு வராது..” என்று கருதினர். ஆனால் படம் வெளியான பிறகு, பலர் படத்திற்கு ஓரளவு நல்ல விமர்சனங்களையே கொடுத்திருந்தனர். பாலிவுட் நாயகி கங்கனா ரணாவத் சந்திரமுகி கதாப்பாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளதாகவும் லக்ஷமி மேனனின் நடிப்பும் படத்திற்கு பலம் சேர்ப்பதாகவும் கருத்துகள் எழுந்தது. ராகவா லாரன்ஸின் முந்தைய ஜென்மத்தின் கதாப்பாத்திரம் பெரிதாக மனதில் நிற்கவில்லை என்றும் அவர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது. 


முதல் பாகத்தில் இருந்த வடிவேலுவின் முருகேசன் கதாப்பாத்திரம் மட்டுமே அதன் இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறது. அந்த பாகத்தில் ரஜினியுடன் இணைந்து காமெடி செய்த அவர், இதில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து காமெடி செய்கிறார். ஆனால், அது ரசிகர்களின் மனங்களில் பெரிதாக நின்றதா என்று கேட்டால், பெரிய கேள்விக்குறிதான். மற்றபடி படத்தின் பாடல்களோ சண்டை காட்சிகளோ ரசிகர்களை பெரிதாக ஈர்த்தது போல தெரியவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. 


மேலும் படிக்க | சந்திரமுகி 2 வசூல் விவரம்: ஒரே நாளில் இத்தனை கோடி கலக்‌ஷனா..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ